For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி.. ராமதாஸ், வைகோ கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மாணவர்கள் மீது தடியடி-வீடியோ

    நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தேர்வுக்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டிய சம்பவம் நேற்று, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைவர்கள் அதற்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரியில் சுமார் 169 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரிகளில் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று இருந்த நடைமுறையை மாற்றி தமிழில் தேர்வு எழுத தடை விதித்து அறிவித்திருந்தது.

    [பத்திரிகைகள் கிட்ட நெருங்காதே.. வைகோ போட்ட பொளேர்!]

    ஊர்வலம்

    ஊர்வலம்

    தேர்வுக் கட்டணங்களையும் பல்கலைக்கழகம் உயர்த்தி அறிவித்திருந்தது. இதற்கு 3 மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதை கண்டித்து மாணவர்கள் நேற்று நடத்திய ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர்.

    தடியடி

    தடியடி

    அப்போது, மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வைகோ கண்டனம்

    வைகோ கண்டனம்

    இதனிடையே, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    ராமதாஸ் கண்டனம்

    இதேபோல, நெல்லையில் தமிழில் தேர்வு எழுத அனுமதி கோரி போராட்டம் நடத்திய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை. மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்! என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Rmadoss and Vaiko has condemn police action against collage students in Nellai, who were protest against education fee hike and Tamil education.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X