வேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மரணத்தில் மர்மம்... போலீஸ் தீவிர விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  Former Vedasandur AIADMK MLA Andivel was found de@d in his farm house | Oneindia Tamil

  திண்டுக்கல்: வேடசந்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  2001-2006 ஆம் ஆண்டு வேடசந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆண்டிவேல். வேடசந்தூர் ஒன்றிய அதிமுக செயலராகவும் 10 ஆண்டுக்கும் மேல் இருந்து வந்தார்.

  ஈமு கோழி வளர்ப்பு மோசடி புகார்கள் ஆண்டிவேல் மீது எழுந்தன. இதனால் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார் ஆண்டிவேல்.

  ஆண்டிவேல் தொடர்பு துண்டிப்பு

  ஆண்டிவேல் தொடர்பு துண்டிப்பு

  இந்நிலையில் எரியோடு அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டி தோட்டத்துக்கு நேற்று வந்தவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

  தோட்ட வீட்டில் சடலம்

  தோட்ட வீட்டில் சடலம்

  இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தண்ணீர்பந்தம்பட்டி தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள வீட்டின் ஒரு அறையில் தாடையில் வெட்டுக் காயத்துடன் ஆண்டிவேல் இறந்து கிடந்தார்.

  வேடசந்தூரில் பிரேத பரிசோதனை

  வேடசந்தூரில் பிரேத பரிசோதனை

  இது தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. எரியோடு போலீசார் ஆண்டிவேல் உடலைக் கைப்பற்றி வேடசந்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  வெட்டிக் கொலையா? மாரடைப்பா?

  வெட்டிக் கொலையா? மாரடைப்பா?

  சம்பவ இடத்தைப் பார்வையிட்ட போலீசார், தாடையில் வெட்டப்பட்டதால் அவர் உயிரிழந்தாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து வெட்டு காயம் ஏற்பட்டதா? என விசாரிக்கப்படுவதாக தெரிவித்தனர். ஈமு கோழி விவகாரத்தில் ஆண்டிவேலிடம் ஏமாந்தவர்கள் யாரேனும் அவரை கொலை செய்துவிட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Former Vedasandur AIADMK MLA Andivel was found dead in his farm house at Thanneerpandhampatti, near Eriyodu on Wednesday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற