For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல்: மைதானத்தில் பாம்பு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல- வேல்முருகன் எச்சரிக்கை

ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானத்தில் பாம்பு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தாக்குதல் நடந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல- வேல்முருகன்- வீடியோ

    நாகை: ஐபிஎல் போட்டி நடைபெறும் சென்னை ஸ்டேடியத்துக்கு பாம்பு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் இன்று நடத்தப்படுகின்றன.

    ஐபிஎல் போட்டிகளை நேரில் கண்டு களிக்க வேண்டாம் என்று தன்னார்வலர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

    உணர்த்துவோம்

    உணர்த்துவோம்

    இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போட்டிகளை பார்க்க சென்னையில் யாரும் போகாமல் இருந்து மைதானமே காலியாக இருப்பதன் மூலம் நம் பிரச்சினைகளை டிவியில் பார்க்கும் உலக நாடுகளுக்கு உணர்த்துவோம் என்று அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கூறி வந்தனர்.

    ரஜினிகாந்த் பேட்டி

    ரஜினிகாந்த் பேட்டி

    இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று சென்னையில் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக கூறிவிட்டார். வீரர்களும், ரசிகர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

    இன்று ஐபிஎல்

    இன்று ஐபிஎல்

    ரசிகர்களோடு ரசிகர்களாக சென்று ஐபிஎல் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். ஆனால் தமிழக கிரிக்கெட் சங்கமோ மைதானத்துக்குள் கொடி, பேட்ஜ், பேனர் உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துவிட்டது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    இந்நிலையில் இதுகுறித்து நாகையில் வேல்முருகன் கூறுகையில் மைதானத்துக்குள் பாம்புகள் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளார். இதனிடையே மைதானத்தை சுற்றி 4000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    Tamilaga Vazhvurimai Party Chief Velmurugan warns that there are not responsible for if any snakes get inside the Stadium.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X