மறுவாழ்வுத் திட்டத்தில் லஞ்சம் வாங்கிய கால்நடை மருத்துவர் அதிரடி கைது: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சாராய வியாபாரிகள் மறுவாழ்வுக்கு கறவை மாடு வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய உதவி கால்நடை மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சித்தலூரில் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கறவை மாடு வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கால்நடை துறை மூலம் கறவை மாடுகள் வழங்க ஏற்பாடு செய்ப்பட்டு இருந்தது.

அதன்படி கறவைமாடு வழங்க வேண்டுமானால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கால்நடை உதவி மருத்துவர் சுகந்தி கேட்டுள்ளார். இதனை முத்துசாமி என்பவர் லஞ்சம் ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் சுகந்தி லஞ்சம் பெற்ற போது போலீசார் அவரைக் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A veterinary doctor arrested in bribery case in viluppuram.
Please Wait while comments are loading...