சபாநாயகர் தனபாலுடன் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீண்டும் சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் இன்று மீண்டும் சந்தித்துவிட்டு சென்றுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை அண்மையில் திரும்பப்பெற்றனர். இதுதொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து அவர்கள் கடிதம் அளித்தனர். இது குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குடகில் உள்ள பேடிங்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

 Vetrivel MLA met Speaker Dhanapal at Secretariat today

இந்நிலையில் சபாநாயகர் தனபாலை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் 3வது முறையாக சந்தித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகருடன் வெற்றிவேல் நடத்திய ஆலோசனையின் போது, அவருடன் டிடிவி தினகரன் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் உடனிருந்தார். முன்னதாக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அரசு கொறடா ராஜேந்திரன் உள்ளிட்டோரும் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinkaran Supporting MLA Vetrivel met Speaker Dhanapal at Secretariat amidst heat waves of Tamilnadu politics

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற