For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ., மரண நீதி விசாரணை... அணிகள் இணைப்புக்கு அச்சாரம் என்கிறார் மாஃபா பாண்டியராஜன்

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்புக்கு ஓபிஎஸ் அணியின் மஃபா பாண்டியராஜன் வரவேற்றுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் இரண்டு அறிவிப்புகளுமே ஓபிஎஸ் அணியின் கோரிக்கைகள்தான். முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதாக மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது என்றார்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

மாஃபா பாண்டியராஜன்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்புகளை வரவேற்பதாக கூறிய அவர், போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக்குவோம் என்ற அறிவிப்பையும் வரவேற்றுள்ளார்.

வேதா நிலையம் நினைவிடம்

வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக்குவோம் என்ற அறிவிப்பும் ரத்தமும் சதையுமாக பாடுபட்ட தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. இதன் மூலம் இணைப்பு பேச்சுவார்த்தைக்காக இருந்த தடைகள் நீங்கியுள்ளன.

தலைவர்கள் பேச வேண்டும்

தலைவர்கள் பேச வேண்டும்

இரு அணிகளைச் சேர்ந்த தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சந்தித்து பேச வேண்டும்
அது விரைவில் நிகழும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனெனில் ஓபிஎஸ் வைத்த 3 நிபந்தனைகளையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

புது எதிரி

புது எதிரி

அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும். தீபாவளிவரை தள்ளிப்போகாது. ஏனெனில் புது எதிரியை புது எதிரியை சந்திக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலையும் சந்தித்தே ஆக வேண்டும் என்பதால் அணிகள் விரைவில் இணைய வேண்டும் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளர்.

English summary
OPS camp Mafai Pandiya Rajan has posted his twitter page, Victory for OPS dharma yuddham. All 3 key demands by OPS met decisively ! Time to transparently negotiate for merger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X