• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

92 டூ 2000 வரை 6... 2001 டூ 10 வரை 8.5... 2011 டூ இப்போது வரை 9.5.... இது விஜய்க்கு கிடைத்த "மார்க்"

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய்யை வெகுவாகப் புகழ்ந்துள்ள அவரது ரசிகை அவர் நடிக்க வந்த ஆண்டு முதல் இப்போது வரையிலான கால கட்டத்தை பிரித்து மதிப்பெண் அளித்து விஜய்யின் நடிப்பு ஆண்டுக்கு ஆண்டு மெருகேறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

விஜய் ரசிகர்களின் வாழ்த்துகளும், புகழ் பாடலும் ஓயாத அலைகளாய் தொடர்ந்து கொண்டுள்ளன. அடுத்தடுத்து அலை அலையாக வந்து குவிந்து கொண்டே உள்ளன.

அதிலிருந்து மேலும் சில வாழ்த்துகள் உங்களது பார்வைக்காக...

வீ லவ் விஜய்... சிந்தியா சுரேஷ்

வீ லவ் விஜய்... சிந்தியா சுரேஷ்

சிந்தியா சுரேஷ் தனது குடும்பத்தோடு விஜய்யை வாழ்த்தியுள்ளார்.. அவரது வாழ்த்து... Thanks for giving opportunity to open heart statement to Brother Mr.Vijay. I have lot to say about Brother Mr.Vijay as per your Request i will give limited comments to Brother Mr.Vijay. I feel my inside of heart Mr.Vijay always part of our family member as a brother.
1. விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம் : Winning & Losing he always be calm and very simple. His helping attitude heart touching and inspiring to others to follow to help poor people.
2. விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும் : For me his suitable role is Police like THERI , Naughty, Romantic and stylish youth like KATHI.
3.விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க் (10க்கு 10, 10க்கு 9.. இப்படி) : YEARS 1992 TO 2000 : 6/10, YEARS 2001 TO 2010 : 8.5/10 , YEARS 2011 TO PRESENT : 9.5/10. I LOVE VIJAY , WE LOVE VIJAY , ALL LOVE VIJAY. Again Thanks to Oneindia.

பண்பானவர் விஜய்... சஞ்சய் குமார்

பண்பானவர் விஜய்... சஞ்சய் குமார்

நான் கோவிலம்பாக்கம் விஜய் நசிகர் மன்ற தலைவராக உள்ளேன்.எங்கள் தங்கத்தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.மற்றவர்களுக்கு உதவும் பண்பே தளபதியிடம் எனக்கு பிடிக்கும்.அவரது சிரிப்பு மிகவும் பிடிக்கும். தளபதி படத்தின் ரஜினி ரோலில் நடித்தால் அருமையாக இருக்கும்.தளபதியின் நடிப்புக்கு மார்க் 10க்கு 10.

தங்கதுரை - நீங்க கிரேட் தலைவா. தமிழ் சினிமாவில் வரலாறு படைத்தவர். பெஸ்ட் ஆப் லக் தளபதி. ஹேப்பி பர்த் டே அண்ணா. பேச்சு பிடிக்கும். ஜோதா அக்பர் படத்தில் ரித்திக் ரோஷன் போல நடிக்க வேண்டும். 10 மார்க் தருவேன்.

ரியல் விஜய் பிடிக்கும்.. வெங்கட் ராஜா, சென்னை

ரியல் விஜய் பிடிக்கும்.. வெங்கட் ராஜா, சென்னை

விஜய் அண்ணன் கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயமே அவரு ஒரு நடிகர் என்றதைத் தாண்டி ரியல் லைப் கேரக்டர் பிடிக்கும். பாசிட்டிவ் பெர்சன். எதையும் வெளில சொல்லிக்காம, பப்ளிசிட்டி பண்ணா ஹெல்ப் பண்ண ஒரு விஷயம் அதை என் கண்ணால நான் பார்த்த விஷயம், இதுவரை அது வெளில வரலை. ஸோ நாம பண்ற ஒரு நல்ல விஷயம், வெளிக் காட்டாம பண்ற விஜய் அண்ணனோட அந்த கேரக்டர் ரொம்பப் பிடிக்கும். அவரோட புன்னகை, ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். 2. விஜய் அண்ணா ஒரு கேங்ஸ்டர் கெட்டப் ரோல்ல மாஸா ஒரு படம் பண்ணும். அவரை அந்த லுக்ல பாக்கனும். 3. இவருக்கு நடிப்பு, டான்ஸ், லுக், இதுல சேர்த்தா 10க்கு 10 குடுக்கலாம்.

போலீஸ் விஜய் பிடிக்கும்.. சக்தி

போலீஸ் விஜய் பிடிக்கும்.. சக்தி

எனக்கு விஜய் டான்ஸ், காமெடி பிடிக்கும். அவர் போலீஸ் கேரக்டரில் நடிப்பதை விரும்புகிறேன். அவருக்கு நான் தரும் மார்க் 10.

தேவபாரி வினோதா, அறிவு, சிலம்பு, கனகு, ஆறு - அண்ணா உங்கள் அனைத்து செயலும் செய்கையும் பிடிக்கும். நீங்க எந்த ரோலில் நடித்தாலும் சூப்பரா இருக்கும். சோஷியல் ஆக்ட் சூப்பர். பத்துக்கு 10 நடிப்புக்கு நாங்கள் தருகிறோம். தலைவா கிரேட்.

கோவை மகேஷ் குமார் - ஸ்டைல், உதவும் மனப்பான்மை, முன்னுதாரணமாக இருப்பது பிடிக்கும். அண்ணாமலை, பாட்சா ரீமேக்கில் அவர் நடிக்க வேண்டும். தெறி போல நடித்தால் பிடிக்கும். எனது மார்க் 10க்கு 10.

வார்த்தையே இல்லை.. காயத்ரி

வார்த்தையே இல்லை.. காயத்ரி

விஜய் பத்தி சொல்லனும்னா வார்த்தையே இல்லை. விஜயோட கியூட் ஸமைல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். விஜய் அண்ணாவை மீட் பண்ணனும்னு ரொம்ப ஆசை. விஜயோட தீவிர பேன் நான். விஜய் நடிக்குறார்னா அதுவே எங்களுக்குப் பெரிய லக். இதுல அவர் எந்த ரோல்ல நடிச்சாலும் நாங்க பாக்கிறதுக்கு வெயிட்டிங் அண்ணா. 10க்கு பத்து என்ன எங்க அண்ணனுக்கு 100க்கு 100.

முதல்வராக நடிக்க வேண்டும்.. கார்த்திக் விஜய்

முதல்வராக நடிக்க வேண்டும்.. கார்த்திக் விஜய்

ஹாய் அண்ணா. நான் கார்த்திக் விஜய். உங்களது புன்னகை, இளமை லுக், நடனம், நடிப்பு பிடிக்கும். முழு அரசியல்வாதியாக அதாவது முதல்வர் கேரக்டரில் நடிக்க வேண்டும். பத்து மதிப்பெண் தருகிறேன்.

கமல் மாதிரி நடிங்க விஜய்... மதன் குமார்

கமல் மாதிரி நடிங்க விஜய்... மதன் குமார்

நான் உங்கள் ரசிகன் அல்ல. தீவிர உலக நாயகன் ரசிகன். ஆனால் உங்களை அளவுக்கு அதிகமாக ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த இடத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சில பேர் உங்களுக்கு நடிப்பு வராது என்றும் நடனம் சூப்பரா வரும் என்றும் சொல்வார்கள். ஆனால் உங்களுக்கு நடிப்பு ரொம்ப ரொம்ப அருமையாக வரும் என்று பலமுறை நீங்கள் நிருபித்திருக்கிறீர்கள். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பாத்ரூமில் அழுவது, ஷாஜகானில் இறுதிக் காட்சியில் அழுவது, பிரியமானவளே படத்தில் சிம்ரன் கத்தியால் குத்து வாங்கி அதை பார்த்து அழுவது, கத்தி படத்தில் "அம்மா நம்மள ஏமாத்திடாங்கம்மா நம்ம சொத்துல மண்ண அள்ளி போட்டானுகம்மா" என்று வரும் காட்சியில் தியேட்டரில் அழாத மக்கள் இல்லை. எனவே நீங்கள் ஒரு அருமையான நடிகர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள் அண்ணா, எனக்கு ஒரு ஆசை நீங்கள் கமல் சார் மாதிரி நிறைய வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.

ஏழைப் பங்காளன் விஜய்.. ரஞ்சித்

ஏழைப் பங்காளன் விஜய்.. ரஞ்சித்

விஜய்யை ஒரு நடிகராக, டான்ஸராக, பாடகராக தவிர ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராக எனக்குப் பிடிக்கும். உதாரணத்திற்கு ஹோட்டல்களில் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதில், சமூக பணிகளில் ஈடுபடுகிறார். பொருளாதார ரீதியில் நலிவடைந்த மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் தருகிறார். விஜய் நடித்த மாஸ் மற்றும் கிளாஸ் படங்கள் கத்தி, துப்பாக்கி. விஜய்க்கு நான் தருவது 10 மதிப்பெண்கள்.

சந்தோஷமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்... பீர் பாஷா

சந்தோஷமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்... பீர் பாஷா

என் உயிர் தளபதி......அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.....நான் மட்டும் அல்ல என் குடும்பத்தாரும் அனைவரும் உங்கள் தீவிர ரசிகர்கள் நாங்கள்.... .உங்களிடம் பிடித்த விஷயம்... இரக்க குணம் மற்றும் உங்கள் அமைதி. இது மட்டும் இருந்தால் போதும். ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்வதற்க்கு ஒரு அடையாளமாக உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம். உங்களுகாக உயிரை கொடுக்கின்ற அளவிற்கு ரசிகர் இருக்கின்றார்கள். அவர்களை எப்போதும் மறந்து விடாதீர்கள். அன்பு தலைவா.. தலைவா என்று சொல்ல எங்கள் இஸ்லாம் மார்க்கத்தில் யாருக்கும் தகுதி இல்லை.. அதை உங்களிடம் பதிவு செய்கிறேன்.. நீங்கள் நிம்மதியாக சந்தோசமாக வாழ ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்.

ஹேப்பி பர்த் டே... ஹரிஅனன்யா

ஹேப்பி பர்த் டே... ஹரிஅனன்யா

Many more happy returns of the day Vijay anna

சக்தி சூர்யா - எனக்கு விஜய் அண்ணாவின் நடனம், நடிப்பு, காமெடி பிடிக்கும். பல்முகத் திறமை கொண்ட நடிகர். அவருக்கு நான் தரும் மதிப்பெண் 10க்கு பத்து.

கோகுல் ஹரி - அவரது அமைதியும், நகைச்சுவை உணர்வும் பிடிக்கும். திருமலை போன்ற மாஸ் படத்திலும் நடிப்பார், நண்பன் படம் போல கிளாஸ் படத்திலும் நடிப்பார். காதலுக்கு மரியாதை போலவும் அசத்துவார்.

சேலம் மணிகண்டன் - எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான விஜய் அண்ணனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கில்லி அல்லது துப்பாக்கி 2ம் பாகம் வர வேண்டும். நடிப்பு, டான்ஸ், பாடுவது, சண்டை, உணர்வ, ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் பிஎச்டி வாங்கியவர் விஜய். தளபதி ஸ்டைல்ல சொல்லனும்னா I'm waiting for thalaivar birthday.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... மூர்த்தி கோபால்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... மூர்த்தி கோபால்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா !

விஜய் மூர்த்தி - ஹேப்பி பர்த்டே அண்ணா. எனக்கு அய்யா காமராஜர்னா ரொம்பப் பிடிக்கும். அவர் மேல் நிறைய மரியாதை வச்சி இருக்கேன். அதுக்குப் பிறகு உங்க மேலதான் மரியாதை அதிகம் வைச்சிருக்கேன். அவரைப் போலவே நீங்களும் நல்ல தலைவனா வர வேண்டும். குவைத்ல இருக்கிற உங்க படம் முதல் நாள் போய் பார்த்தாத்தான் எனக்குத் தூக்கம் வரும்.

எனக்கு அண்ணன் விஜய்தான்... பிரியா கோபால்

எனக்கு அண்ணன் விஜய்தான்... பிரியா கோபால்

விஜய் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு அண்ணன் இல்லை. எனவே விஜய் அண்ணாவைத்தான் நான் சிறு வயதிலிருந்தே அண்ணனாகப் பார்க்கிறேன். நீண்ட காலம் வாழ்க அண்ணா. அவரது புன்னகை பிடிக்கும். இரக்க குணம், எளிமை பிடிக்கும். அவருக்கு நான் தருவது 10க்கு 10 மார்க். எனக்குப் பிடித்த படங்கள் - கில்லி, துப்பாக்கி, தெறி. அண்ணா நடித்த சென்டிமென்ட் படங்கள் எல்லாம் பிடிக்கும்.

சேகுவெரா, பிரபாகரன் போல நடிக்க வேண்டும்.. கத்தார் மணி

சேகுவெரா, பிரபாகரன் போல நடிக்க வேண்டும்.. கத்தார் மணி

புரட்சியாளர்கள் சேகுவெரா, பிரபாகரன் போன்ற வேடங்களில் நடிக்க வேண்டும் விஜய். அவரது நடிப்புத் திறமைக்கு நான் தரும் மதிப்பெண் 9. அவரது அமைதி, விட்டுக் கொடுக்காத சுபாவம் மிகவம் பிடிக்கும். சமூகம் குறித்த அவரது அணுகுமறை பாராட்டப்பட வேண்டியது. அவரது நடனத் திறமை பாராட்டப்பட வேண்டியது.

அண்ணனுக்கு 100000000000000 மார்க்.. செந்தில்நாதன்

அண்ணனுக்கு 100000000000000 மார்க்.. செந்தில்நாதன்

நான் விஜய் ரசிகன் என்று சொல்வதை பெருமையாக உணர்கிறேன் ஏனெனில் அவருடைய ACTION, STYLE, SIMPLICITY எனக்கு பிடிக்கும் மேலும் விஜய் அண்ணனுக்கு 100000000000000 MARK
பாண்டியராஜ் - ஹாய் விஜய் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்தான் என்னோட ரோல் மாடல். அவரது ஆக்டிங் வெரி சூப்பர். பாடல்கள் சூப்பர். நான் அவரை மீட் பண்ணனும்னு ஆசைப்படுறேன். அண்ணா கூட ஒரு ஹக் பண்ணிக்கனும் போல இருக்கு.நிறைய ஹெல்ப் பண்ணுகிறார். லவ்யூ அண்ணா.

மீண்டும் 'குஷி' வேண்டும்...லியோ ராஜ்

மீண்டும் 'குஷி' வேண்டும்...லியோ ராஜ்

Wish you a many more happy returns of the day !!!!
1.விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம். Every Thing
2.விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும். Any Role (I want to see one more time - kushi Vijay)
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க்: 10/10
செளகத் - விஜய்யின் அமைதி, எளிமை பிடிக்கும். தலைமைத்துவம் பிடிக்கும். 10 மற்றும் அதற்கும் மேல் மார்க் போடலாம். விஜய் பிரதரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

English summary
Fans of actor Vijay are continuing their wishes to their favorite actor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X