For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானங்கெட்ட பிழைப்பு.. தூக்கு போட்டு சாகலாம்.. போலீஸை "பொளந்து" கட்டிய விஜயகாந்த்!!

By Mathi
Google Oneindia Tamil News

உளுந்தூர்பேட்டை: தேமுதிகவின் மாநில மாநாட்டை தடுக்க முயற்சித்த போலீஸாரை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கடுமையாக சாடினார். அத்துடன் இப்படியான மானங்கெட்ட பிழைப்புக்குப் பதிலாக போலீசார் தூக்குப் போட்டு சாகலாம் என்றும் அவர் விமர்சித்தார்.

உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சியில் நடைபெற்ற தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:

போலீஸாக நடிக்க மாட்டேன்

போலீஸாக நடிக்க மாட்டேன்

போலீஸ் என்றால் மக்களுக்கு நண்பன் என்று நினைத்து போலீஸ் வேடங்களை ஏற்று நடித்தேன். இனி போலீஸ்காரனாக நடிக்க மாட்டேன்.

மகனையும் நடிக்க விடமாட்டேன்

மகனையும் நடிக்க விடமாட்டேன்

எனது மகனையும் நடிக்க விட மாட்டேன். அந்த அளவுக்கு போலீஸ்காரர்கள் வேடம் போடுகிறார்கள். ஆட்சியாளர்களின் கைப்பாவையாக விளங்குகிறார்கள்.

அடுத்து தேமுதிக ஆட்சி

அடுத்து தேமுதிக ஆட்சி

ஆண்ட கட்சிகளும், ஆளுகின்ற கட்சிகளுக்கும் இனி ஒன்றை சொல்கிறேன். தே.மு.தி.க.தான் அடுத்து ஆட்சியில் அமரப் போகிறது.

நாட்டை சுத்தப்படுத்த முடியும்

நாட்டை சுத்தப்படுத்த முடியும்

எனது பேச்சை கேட்க திரண்டு வந்து இருக்கும் தொண்டர்களை பார்க்கும் போது எனக்கு உற்சாகம் பிறக்கிறது. இந்த இளைஞர் படை இருக்கும் போது, என்னால் நாட்டை சுத்தப்படுத்த முடியும்.

விவேகானந்தரிடம் கொடுப்பேன்..

விவேகானந்தரிடம் கொடுப்பேன்..

நாட்டை திருத்த விவேகானந்தர் 100 இளைஞர்களை கேட்டார். எனது கட்சியில் 25 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். இப்போது அவர் கேட்டால் நீங்கள் கேட்ட இளைஞர்கள் இதோ என கொடுப்பேன்.

கயிறு அல்ல நரம்பு

கயிறு அல்ல நரம்பு

என் கட்சித் தொண்டர் கட்டும் பேனர் கயிறு என்பது என் தொண்டனின் நரம்பு... அறுக்க முடியாது

டாஸ்மாக் கடைக்கு இலக்கு

டாஸ்மாக் கடைக்கு இலக்கு

இளைஞர்களை கெடுக்க வேண்டும் என்பதற்காக டாஸ்மாக் கடைகளை திறந்துவைக்கிறார்கள். டாஸ்மாக் விற்பனைக்கு மட்டும் ரூ.100 கோடி, ரூ.150 கோடி என்று இலக்கை ஏற்றிக்கொண்டே வருகிறார்கள்.

விவசாயத்துக்கு இலக்கு இல்லையே

விவசாயத்துக்கு இலக்கு இல்லையே

இதே போல் விவசாய உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? விழுப்புரம் விவசாய பூமி. விவசாயிகள் கரும்புக்கு கூடுதல் விலை கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோமாரி நோயால் கால்நடைகள் இறப்பதாகவும் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், அதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பேசவிடுவதில்லையே.

பேசவிடுவதில்லையே.

சட்டசபைக்கு ஏன் போகவில்லை என்று பலர் கேட்கின்றனர். அங்கே எதையும் பேச விடுவதில்லை.

"110 மேனியா"

சட்டசபையில் விதி எண் 110-ன்படி முக்கியமாக அறிக்கையை படிப்பது மரபு. ஆனால், ஜெயலலிதா சட்டசபைக்கு வந்ததும் நிறைய திட்டங்களை அறிவிக்கிறார். இதுவரை அவர் ரூ.8 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவித்துள்ளார். ஆனால், பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடிக்கு மட்டும்தான் போடுகிறார்கள். பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை.

தண்ணிகாட்டும் ஜெயலலிதா

தண்ணிகாட்டும் ஜெயலலிதா

தற்போது ரூ.1-க்கு இட்லி விற்கிறார்கள். ஆனால், தண்ணீருக்கு ரூ.10 விலை வைக்கிறார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய முதல்-அமைச்சர், மக்களுக்கு தண்ணீர் காட்டிக்கொண்டு இருக்கிறார். விஜயகாந்த் தலை குனிவான். ஆனால், தொண்டர்களை தலை குனிய விடமாட்டான்.

13 இடைத்தேர்தலில் ஜெயக்க முடியலையே..

13 இடைத்தேர்தலில் ஜெயக்க முடியலையே..

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். ஆளுங்கட்சி திட்டங்களில் குறைகள் இருந்தால், அதை கூட்டணி கட்சிக்காரர்கள் சுட்டிக்காட்டத்தான் செய்வார்கள். தவறுகளை கூறினால், எங்களை பார்த்து திராணி இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். இடைத்தேர்தலில் ஜெயித்து பாருங்கள் என்று சவால்விட்டார்கள். கடந்த ஆட்சியில் 13 இடைத்தேர்தல்கள் வந்தன. அதில் எத்தனை தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்தது?

ஜிங்ஜாங் போடுவதற்கு அல்ல..

ஜிங்ஜாங் போடுவதற்கு அல்ல..

கூட்டணி கட்சி என்றால் சட்டசபையில் ஜிங்ஜாங் போடுவதற்கு அல்ல. தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்.

நான் தலைகுனிவேன்..ஆனா

நான் தலைகுனிவேன்..ஆனா

நான் தலை குனிந்தாலும் எனது தொண்டர்களை தலை குனிய விடமாட்டேன்.

தொடரும் மின்வெட்டு

தொடரும் மின்வெட்டு

6 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை கொடுக்கிறார்கள். மின்வெட்டை நீக்கிவிட்டோம் என்கிறார்கள். இன்று கூட 4 முறை மின்வெட்டு உள்ளது.

சட்டம்–ஒழுங்கு

சட்டம்–ஒழுங்கு

ஆட்சி அதிகாரத்தை எங்களுக்கு ஒருமுறை கொடுத்துப்பாருங்கள். ஊழலை ஒழிக்க வந்தவர்கள் என்பதை நீங்களே கூறுவீர்கள். அந்த காலம் விரைவில் வரும். மக்கள் அப்படி கூறுவதை என் காதுகளால் கேட்பேன்.

அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம்

அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம்

அடிக்கடி அமைச்சர்களையும், அதிகாரிகளையும் மாற்றுகிறார்கள். இது அதிகாரத்துக்கு மட்டும் அல்ல; மக்களுக்கும் கேடு என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது.

ஜெ.வால் படுத்த படுக்கையான வாஜ்பாய்

ஜெ.வால் படுத்த படுக்கையான வாஜ்பாய்

ஜெயலலிதாவின் செயலால்தான் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பதவி இழந்தார்.. அன்று முதல் படுத்த படுக்கையாய் போனார். அவர் சொன்னாரே.. இரு பெண்களால் பட்டபாடுபோதும்..நிம்மதியாக தூங்குவேன்.. அந்த 2 பெண்களால்தான் தான் அவர் பதவி இழந்தார்.

சாது மிரண்டால்..

சாது மிரண்டால்..

குனிய குனிய மக்களை குட்டுகிறார்கள். குனிந்தவன் நிமிர்ந்து விட்டால், நிலைமை தலைகீழாகி விடும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. வருகிற தேர்தலில் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

காசு கொடுத்து சீட்டு..

காசு கொடுத்து சீட்டு..

40 சீட்டையும் காசு கொடுத்து வாங்கலாம் என்று ஜெ.யலலிதா நினைக்கிறார்.

ஓட்டுக்களை விற்காதீர்கள்..

ஓட்டுக்களை விற்காதீர்கள்..

தேர்தல் நேரத்தில் பணம், பிரியாணி, மதுவுக்கு அடிமை ஆகிவிடாதீர்கள். உங்கள் ஓட்டுக்களை விற்று விடாதீர்கள்.

குள்ள ஜெயலலிதா

குள்ள ஜெயலலிதா

குள்ளமாக இருக்கும் ஜெயலலிதாவுக்கு உயரமாக இருக்கும் ஆண்கள் குனிந்துதான் வணக்கம் சொல்ல வேண்டும். அதை பார்த்து சொல்வதற்கு போலீஸார் வேறு...

சொத்து குவிப்பு வழக்கு

சொத்து குவிப்பு வழக்கு

66 கோடி ரூபாய் சொத்து குவிப்பில் ஜெயலலிதா சிக்கி தவிக்கிறார். நான் உண்மையை பேசினால் குடித்து விட்டு பேசுகிறேன் என்று குறை சொல்கிறார்கள்.

கூட்டணி வைத்து பட்டபாடு

கூட்டணி வைத்து பட்டபாடு

விஜயகாந்த் ஏதோ கூட்டணி பற்றித்தான் பேசப்போகிறார் என்று நினைத்து வந்து இருக்கிறார்கள். இதோ தொண்டர்களின் கருத்தை கேட்கிறேன். கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? (அப்போது தொண்டர்கள் கூட்டணி வேண்டாம் என்று கையசைத்து கூறினர்.)

தொண்டர்கள் கூட்டணி வேண்டாம், வேண்டாம் என்கிறார்கள். நான் அவர்களின் பேச்சை கேட்பேன். ஆனால், தலைவர் என்ற முறையில் இதை மீறியும் முடிவு எடுக்கலாம். போன சட்டமன்ற தேர்தலில் தொண்டர்களை கேட்டுதான் கூட்டணிக்கு முடிவு எடுத்தேன். கூட்டணி சேர்ந்து அசிங்கப்பட்டது, அடிபட்டு, மிதிபட்டது போதும்.

மக்களுடனேயே கூட்டணி

மக்களுடனேயே கூட்டணி

மக்களுடன்தான் கூட்டணி. தொண்டர்களுக்கு மதிப்பு கொடுப்போம். அதே நேரத்தில் தலைவர்கள் முடிவு எடுத்தாலும் அதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கூட்டணி வைத்து கசப்பான அனுபவங்களை சந்தித்து விட்டோம்.

English summary
Desiya Murpokku Dravida Kazhagam leader Vijayakanth attack the Cheif Minister Jayalalithaa and Police in Ulundurpet meeting on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X