For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் சொத்து மதிப்பு ரூ.19.37 கோடி.. பிரேமலதா சொத்து மதிப்பு ரூ.17 கோடி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ரூ.19.37 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், அவரது மனைவி பிரேமலதாவுக்கு ரூ.17 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், வேட்புமனுவில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும், விஜயகாந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில்தான் மேற்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், விஜயகாந்த்துக்கு ரூ.4.82 கோடி கடன் இருப்பதாகவும், பிரேமலதாவுக்கு ரூ.41 லட்சம் கடன் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Vijayakanth has asset worth 19.37 crores

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் 2011ல் விஜயகாந்த் போட்டியிட்டபோது ரூ.20 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

கையிருப்பாக 6 லட்ச ரூபாய், மனைவி கையிருப்பு 6 லட்சம், வங்கி வைப்பு நிதி 1.56 லட்சம் ரூபாய், ஆண்டாள் அழகர் மண்டபம், கேப்டன் பார்ம் லிட்., பங்குகளாக 3 கோடியே 68 லட்சம் ரூபாய், கேப்டன் மீடியா நிறுவன பங்கு 10 கோடி ரூபாய், சொனாடா கார், டெம்போ டிராவலர், போர்ட் எண்டவர் வாகனங்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல, தன் பெயரில், 9 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயும், மனைவி பெயரில் 1.28 கோடி ரூபாயும் வைத்துள்ளதாகவும், அசையா சொத்து: மதுராந்தகம் கரடிப்புத்தூர் இருகூர் பகுதியில் 12.46 கோடி ரூபாய் மதிப்பில் 61 ஏக்கர், மனைவி பெயரில் 8.47 கோடி ரூபாய் மதிப்பில் 39 ஏக்கர், மகன் பெயரில் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் 32 ஏக்கர் நிலம். விவசாய மற்ற நிலங்களாக விஜயகாந்திற்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பிலும், மனைவி பெயரில் 4 கோடியே 43 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

விஜயகாந்த் செலுத்த வேண்டிய வரி பாக்கிகள் மற்றும் கடனாக 7 கோடியே 52 லட்சமும், வங்கிக் கடனாக 2 கோடியே 54 லட்ச ரூபாயும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijayakanth has asset worth 19.37 crores revealed in the nomination paper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X