புதுவையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் 3840 மதுபாட்டில்கள் வேனுடன் பறிமுதல் - ஒருவர் கைது
விழுப்புரம்: புதுவையிலிருந்து விழுப்புரத்திற்கு வேனில் கடத்தி கொண்டு வரப்பட்ட 3840 மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் பெரம்பை பேருந்து நிறுத்தம் அருகே கோட்டகுப்பம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த டாட்டா மினி வேன் ஒன்றினை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில், புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 3840 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கோட்டகுப்பம் காவல்துறையினர் வாகனம் மற்றும் மதுபாட்டில்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். அத்துடன் வேனை ஓட்டி வந்த விழுப்புரம் மாவாட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு 6 லட்சம் என கூறப்படுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!