விழுப்புரம் ரயிலில் திடீர் தீவிபத்து.... திட்டமிட்ட சதியா? : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: ரயில்வே நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் திடீரென தீப்பற்றி, ரயில் பெட்டி எரிந்து நாசமானது. இந்த தீவிபத்துக்கு என்ன காரணம் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வந்த ரயில் அங்கு நின்றுகொண்டிருந்தது. அடுத்து அந்த ரயில் காட்பாடிக்கு செல்லும் முன், விழுப்புரத்தில் சுத்தம் செய்யப்படும்.

 Viluppuram train met with fire accident and reason not yet found

அப்போது நின்றுகொண்டிருந்த ரயிலில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கடைசிப் பெட்டியில் தீப்பற்றியதும் அதிலிருந்து புகை வர ஆரம்பித்தது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

ரயில்வே அதிகாரிகள் எரிந்த பெட்டியை சோதனையிட்டனர். அவர்களால் தீவிபத்துக்கான காரணம் கண்டறிய முடியவில்லை. உரிய விசாரணை மேற்கொண்ட பின்பே விபத்துக்கான காரணம் கண்டறியப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Viluppuram railway station puducherry to viluppuram passenger train met fire accident and still reason not found.
Please Wait while comments are loading...