For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்திலும் 'ஸ்மார்ட் கிராமங்கள்' சாத்தியமே... வழி சொல்கிறார் சென்னை பேராசிரியர்

தமிழக கிராமங்களும் எல்லா வசதிகளும் பெற்று, மேன்மைப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கிராமங்களாக உருமாற்றம் அடைய சிறந்த வழிகள் உள்ளன என்கிறார் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விமல்குமார்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக கிராமங்கள் மேன்மைப்படுத்தப்பட்டு ஸ்மார்ட் கிராமங்களாக வளர சிறந்த வழிகள் உள்ளனவென்று சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விமல்குமார் உறுதியாக கூறுகிறார் ஆராய்ச்சியாளர் விமல் குமார்.

மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுக்க முக்கிய நகரங்களைத் தேர்ந்தெடுத்து 'ஸ்மார்ட் சிட்டி' களாக மாற்ற முயற்சித்து வருகிறது. அதனடிப்படையில் இதுவரை மூன்று கட்டங்களாக அறிவிப்புகள் வெளியிட்டு இந்திய நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக மற்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி இது வரை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் சேர்த்து ஸ்மார்ட் சிட்டிகள் என்று மொத்தம் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன. ஸ்மார்ட் சிட்டிகள் அனைத்தும் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், திருப்பூர், வேலுர், தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளன.

 மேன்மைப்படுத்தப்பட்ட கிராமம் (SMART VILLAGE):

மேன்மைப்படுத்தப்பட்ட கிராமம் (SMART VILLAGE):

இந்த நிலையில் மேன்மைப்படுத்தப்பட்ட கிராமங்களை தமிழகத்தில் நிச்சயம் உருவாக்கலாம் என்று முழு நம்பிக்கைத் தந்து அசத்துகிறார் அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விமல்குமார்.

 ஒன் இந்தியா வாசகர்

ஒன் இந்தியா வாசகர்

இது தொடர்பாக நமது ஒன் இந்தியா வாசகர் கணேஷ் அமெரிக்காவிலிருந்து மெயில் மூலம் நமக்கு ஸ்மார்ட் கிராமங்கள் பற்றி பகிர்ந்துகொண்டார். அதில், " என்னுடைய அலுவலக பணிகள் காரணமாக, அமெரிக்காவின் பெர்க்லே பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது.

 நாட்டின் முன்னேற்றம் என்பது கிராமங்களில் இருக்கிறது

நாட்டின் முன்னேற்றம் என்பது கிராமங்களில் இருக்கிறது

அங்கே, பேராசிரியர் திரு. சாலமன் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவரின் "மேன்மை படுத்தப்பட்ட கிராமம்" தொடர்பான திட்டங்களில் அவர் தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது கிராமங்களில் இருக்கிறது என ஒரு அறிஞர் சொன்ன தீர்க்கதரிசனம் இப்போது நிஜமாகிக் கொண்டிருக்கிறது.

 ஸ்மார்ட் கிராமம் என்பதுகுறித்து விளக்கம்

ஸ்மார்ட் கிராமம் என்பதுகுறித்து விளக்கம்

அது என்ன மேன்மை படுத்தப்பட்ட கிராமம்? ஆங்கிலத்தில் (SMART VILLAGE), அப்படியென்ன இருக்கிறது இதில்? என்ற ஆர்வமிகுதியால், இந்த திட்டத்தைப் பற்றியும் எங்கெங்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் விளக்குமாறு கூறினேன்.

 முற்றிலும் தன்னிறைவு கொண்ட கிராமம்

முற்றிலும் தன்னிறைவு கொண்ட கிராமம்

மேன்மை படுத்தப்பட்ட கிராமம் என்பது முற்றிலும் தன்னிறைவு கொண்ட வளர்ச்சி பெற்ற கிராமமாக உருவாக்கப்படுகிறது. இங்கே, அறிவியலின் துணை கொண்டு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

 முன்னோடியாக ஆந்திர மாநிலம்

முன்னோடியாக ஆந்திர மாநிலம்

அப்படி செயல் படுத்தப்படும் ஒரு "மாதிரி கிராமம்", இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள "மோரி" என்ற கிராமப் பகுதியில் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது அந்த மாநில முதல்வரின் கனவு திட்டம்.

 கிராமமும் சிறப்பான வாழ்விடங்களாக மாற்றம்

கிராமமும் சிறப்பான வாழ்விடங்களாக மாற்றம்

கிராமமா - நகரமா? என்ற போட்டியில் கிராமத்தையும் மக்கள் சிறப்பாக வாழும் பகுதியாக மாற்றுவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, சுகாதாரமான கழிவறைகள், சூரிய ஒளி மூலம் மின்சாரம்,மீன்வளர்ப்பு, நீர்ப்பாசன வசதிகளுடன் விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும் கைத்தறி நெசவு இயந்திரங்கள் மூலம் துணிவகைகள் நெய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளும், நெசவாளர்களும் பெரிதும் பயனடைந்து மகிழ்ச்சியாக உள்ளனர்.

 ஆதாருடன் இணைக்கப்பட்ட கிராமங்கள்

ஆதாருடன் இணைக்கப்பட்ட கிராமங்கள்

புதிய தொழில்நுட்ப உதவியுடன் வங்கி கணக்குகள், ஆதார் போன்ற அரசின் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். இது கிராம மக்களையும் டிஜிட்டல் சூழலுக்கு கொண்டு செல்லும் வழிமுறையாகும்.

 சாத்தியமாக்கிய இணைய செயலி

சாத்தியமாக்கிய இணைய செயலி

இணைய செயலி (Internet of Things) மூலம் இவை அனைத்தையும் சாத்தியமாக்கி இருக்கிறது. இந்த எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்த கல்வி பல வகைகளில் நம்முடைய சமூகத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அனைத்தையும் உள்ளடக்கியதாக. ஸ்மார்ட் வில்லேஜ், ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் ஹெல்த் மற்றும் ஸ்மார்ட் டிரான்ஸ்போர்ட் என ஒரு செம்மையான வழி நடத்துதலைக் கொண்டிருக்கிறது.

 மாணவ மாணவிகளுக்கு சிறந்த எதிர்காலம்

மாணவ மாணவிகளுக்கு சிறந்த எதிர்காலம்

இதனைப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் நன்கு உணர முடிகிறது. திரு. விமல்குமார் என்பவர், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் இவர், மேன்மைப்படுத்தப்பட்ட கிராமத்திற்கு சென்று அதன் செயல்பாட்டிற்கு இந்த தொழில் நுட்பத்தைப்பற்றி பலருக்கும் எடுத்துரைத்துள்ளார்.

 ஐபிஎம் உதவுகிறது

ஐபிஎம் உதவுகிறது

இவரின் ஆராய்ச்சிக்கு பிரபல கணினி நிறுவனம் ஐ பி எம் உதவிவருகிறது. அவரின் மெயில் முகவரி: [email protected] மூலம் தொடர்பு கொண்டு நம்முடைய கல்வி மற்றும் எதிர்கால தேவை/சேவைகளுக்கான உதவியை மாணவ மாணவிகளும், வேலை செய்து கொண்டு இருப்பவர்களும் தங்களுடைய மேற்படிப்பு மற்றும் எதிர்காலத்தை சரிவர கொண்டு செல்ல நினைப்பவர்களும் தகுந்த வழிநடத்துதல் பெறலாம்.

ஒரு சிறந்த எதிர்காலம் இப்போது நம் கையில்." என்று கூறியுள்ளார் கணேஷ்.

English summary
We can set up smart villages in Tamilnadu too, says Chennai Anna University Professor Vimal kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X