எங்களை கொன்று விடுவதாக போன் மூலம் மிரட்டல்... ஏதாவது நடந்தால் எச். ராஜாதான் பொறுப்பு - அய்யாக்கண்ணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாவே பொறுப்பு என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை உடனே கைவிடவேண்டும் என்று தொலைபேசிகள் மூலமாக ஆள் வைத்து மிரட்டுவதாகவும், எங்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் எச். ராஜாவே பொறுப்பு என்றும் அய்யாக்கண்ணு திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார்.

We receive Phone threat to stop protest, says Farmers Association leader Ayyakannu

அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் ஒருவாரம் கடந்த நிலையில் மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று மர்மநபர்கள் சிலர் விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது போராடும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு, " டெல்லியில் போராடினால் உங்கள் மீது லாரி கார் ஏற்றி கொன்றுவிடுவோம்.

அரசுக்கு எதிராக போராட உங்களை முஸ்லிம்கள் தூண்டிவிடுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தூண்டி விடுகிறார்கள். சென்னைக்கு வா. இங்க வந்து போராடுங்க. எடப்பாடி வீட்டுக்கு அம்மணமா போங்க. ஏன் டெல்லியில மத்திய அரசுக்கு எதிராக போராடுறீங்க. இப்படி போன்ல தினமும் எனக்கு மிரட்டல் வருகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட மிரட்டல் போன் அழைப்புகள் வந்துள்ளன" என்று கூறியுள்ளார்.

TN Farmers protest starts in Delhi again-Oneindia Tamil

எங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் காரணம் என்றும் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
we are receiving phone call threat to stop our protest, says farmers association leader ayyakannu at Tiruchirappalli.
Please Wait while comments are loading...