தினகரன் அணியில் ஆதரவு ஸ்லீப்பர் செல்கள்... திகிலூட்டும் வைத்திலிங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: டிடிவி தினகரன் அணியில் எங்களின் ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர் திடீரென பேட்டி கொடுத்து திகிலூட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் எம்.பி வைத்திலிங்கம்.

எடப்பாடி பழனிச்சாமி அணியில் எங்களுக்கு ஆதரவாக ஸ்லீப்பர் செல் போல எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். தேவையான போது ஆதரவு தருவார்கள், எங்களின் பலத்தை நிரூபிப்போம் என்று தினகரன் கூறி வருகிறார்.

ஆனால் அவரது ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களோ இல்லையோ தினகரன் அணியில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பது போலவே தெரிய வருகிறது. திடீரென ஜக்கையன் எம்எல்ஏ அணி மாறினார்.

சில தினங்களுக்கு முன்பு வரை தினகரன் ஆதரவாளராக அவரது மீடியேட்டராக இருந்த தளவாய் சுந்தரம் திடீரென எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக மாறினார். இது தினகரனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பு குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

வைத்திலிங்கம் எம்.பி

வைத்திலிங்கம் எம்.பி

இந்த நிலையில் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள வைத்திலிங்கம் எம்.பி. தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு அவருக்கு திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நூறாண்டுகளுக்கு நீடிக்கும்

நூறாண்டுகளுக்கு நீடிக்கும்

அதிமுக இந்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசைப்படி அடுத்துவரும் நூறாண்டுகளுக்கும் நீடிக்கும். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

யாரையும் மிரட்டவில்லை

யாரையும் மிரட்டவில்லை

தினகரனுக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரையும் அரசுக்கு ஆதரவாக வரக்கோரி அவர்களிடம் பேரம் பேசி மிரட்டுவதாக கூறுப்படுவது உண்மைக்கு புறம்பானது. இது ஜனநாயக நாடு, யாரும் யாரையும் மிரட்ட முடியாது.

ஸ்லீப்பர் செல்கள்

ஸ்லீப்பர் செல்கள்

ஜக்கையன் எம்எல்ஏ போல பலரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தர வருவார்கள். அங்கும் எங்கள் ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் வைத்திலிங்கம். ஸ்லீப்பர்கள் செல்கள் பற்றி தினகரன் கூறி வந்த நிலையில் திடீரென வைத்திலிங்கம் பேசி திகிலூட்டி வருகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Vaithilingam has said that we too have our own sleeper cells in Dinakaran camp.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற