முதல்வர், 6 முக்கிய அமைச்சர் பதவிகள்... இதுதான் ஓபிஎஸ் டிமாண்ட்ஸ்.. போட்டு உடைத்த வெற்றிவேல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் பதவி, மின்சாரம், நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட 6 துறைகளின் அமைச்சர் பதவிகள் தங்களுக்கே அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முன்வைப்பதாக சசிகலா அணி வெற்றிவேல் தெரிவித்தார்.

அதிமுக இணைவு குறித்து இரவு பகலாக அமைச்சர்கள் கூட்டம் கூடி ஆலோசித்து வரும் வேளையில் சசிகலா அண்ட் கோ இருக்கும் வரை அதிமுக இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் இன்று தெரிவித்தார்.

What are the OPS demands? says Vetrivel

இதுகுறித்து சசிகலா அணியின் வெற்றிவேல் பேசுகையில், சசிகலா, டிடிவி தினகரன் அந்தந்த பொறுப்புகளில் தொடர வேண்டும். நிமிடத்துக்கு ஒரு பேச்சு பேசும் ஓபிஎஸ்ஸை நம்பி இறங்க முடியாது.

அவருக்கு முதல்வர் பதவி வேண்டுமாம், மேலும் மின்சாரம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை ஆகிய 6 அமைச்சர் பதவிகள் அவர்கள் அணியை சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டுமாம். இதுதான் அவரது டிமாண்டுகள். இதை அப்படியே செய்தியாக்குங்கள் என்று ஆவேசமாக கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
O.Panner Selvam asks CM post for him and 6 ministries for his colleagues, says Vetrivel MLA from Sasikala.
Please Wait while comments are loading...