For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே. நகரில் நடந்தது என்ன? வாட்ஸ்அப்பில் வலம் வரும் திமுகவினர் விளக்கம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு திமுகவை விட, அதிமுகவுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.விஸ்வரூபமெடுக்கும் அதிகார மோதல், கட்சியையும், ஆட்சியையும் நிச்சயம் காவு வாங்கும் என்று திமுகவினர் கூறி வருக

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலின் செய்ய தவறியது இதுதான்!- வீடியோ

    சென்னை: தினகரன் வெற்றியினால் தமிழக அரசில் அதிகார போட்டி நடக்கும். அப்போது குட்டை குழம்பும், மீன் பிடிக்கலாம் என்று திமுக காத்திருக்கிறது. இது ஆட்சி கலைப்புக்கான ஸ்கெட்ச் என்றும் கூறி வருகின்றனர். ஆர்.கே. நகரில் நடந்தது என்ன என்று விளக்கம் அளித்துள்ளனர்.

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக தனது டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளதால் பல்வேறு விமர்சனங்களும் ஸ்டாலின் மீது முன் வைக்கின்றனர்.

    இந்த குற்றச்சாட்டுக்கு திமுகவினர் அளிக்கும் விளக்கமோ வேறு மாதிரியாக உள்ளது. வாட்ஸ் அப்பில் கேள்வி பதில் வடிவிலான விளக்கத்தை அளித்துள்ளனர்.

    தோல்விக்கான காரணம் என்ன?

    தோல்விக்கான காரணம் என்ன?

    # அதிமுக இரண்டாகப்பிரிந்த நிலையிலும்திமுக வெற்றிபெறவில்லையே?

    மேலோட்டமாகப் பார்த்தால்இந்தக் கேள்வியில்அர்த்தம் இருப்பதாகத் தெரியும். ஆனால்உண்மையான களநிலவரத்தைப்புரிந்துகொண்டால்அர்த்தம்,அபத்தமாகிவிடும். ஆர்கேநகரில் நடைபெற்றது தேர்தலே அல்ல. இது தேர்தல் ஆணையத்திலிருந்து, சின்னக் குழந்தைவரை நன்றாகத் தெரியும். அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையேநடைபெற்றுவந்த அதிகார மோதலின் தொடர்ச்சியே இந்தத் தேர்தல்.

    விலைமதிப்பற்ற வாக்குகள்

    விலைமதிப்பற்ற வாக்குகள்

    இரு தரப்புகளுக்குமே வாழ்வா,சாவா நெருக்கடி.எனவே வரலாறு காணாத வகையில் பணத்தைஅள்ளியிறைத்தார்கள். பச்சையாகசொல்வதானால் 10(ஆயிரம்) பெரிதா, 6(ஆயிரம்) பெரிதா? என்கிறகரன்சி யுத்தத்தம்தான் அங்கே நடைபெற்றது. இதில் திமுகவிற்குக் கிடைத்த வாக்குகள் விலைமதிப்பற்றவை. அதை குறைத்து மதிப்பிடுவது சரியாகஇருக்காது.

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    # போனமுறை வாங்கியவாக்குகளைக் கூட திமுக இந்தமுறைவாங்கவில்லையே?

    குறிப்பிட்ட ஒரு கட்சி,குறிப்பிட்ட ஒருதொகுதியில் ஒருமுறைவாங்கிய வாக்குகளைஅப்படியே நகலெடுத்தமாதிரி அடுத்தமுறைவாங்கியதில்லை,வாங்கவும் முடியாது. தேர்தலில் முன்வைக்கப்படும் முக்கிய பிரச்சனை தொடங்கி இதற்கு பல காரணிகள் உண்டு. போன முறை ஆர்கே நகரில் நடந்தது பொதுத்தேர்தல். அப்போது " திமுக ஆட்சியில்அமர வேண்டும் " என்றஅடிப்படையில் உதயசூரியனுக்கு 56,000 வாக்குகள் விழுந்தன. ஆனால் இப்போது நடந்திருப்பதோ இடைத்தேர்தல் என்கிற பெயரில் அரங்கேறிய வாக்கு விற்பனை.

    வாக்குகள் எங்கே?

    வாக்குகள் எங்கே?

    இந்தவர்த்தக சூதாட்டத்தில் திமுக கடுகளவு கூட பங்கேற்கவில்லை. தலைமை அதை அனுமதிக்கவும் இல்லை. இத்தகைய சூழலில் போன முறை வாங்கிய வாக்குகள் எங்கே போயிற்று என கேட்பது அர்த்தமற்றது.
    இவ்வளவு ஏன்?2015 இடைத்தேர்தலில்ஜெயலலிதாவாங்கியது 1,60,432 வாக்குகள். அதற்குப் பின்னர் அவரும் சரி, அவரது வாரிசுகளாகச் சொல்பவர்களும் சரி, இந்தளவு வாக்குகளை வாங்கியதில்லை. அப்படியானால் ஆர்கேநகரில் அதிமுகசெல்வாக்குக்குறைந்துவிட்டது என்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

    டெபாசிட் காலி

    டெபாசிட் காலி

    # திமுக டெபாசிட்டைபறிகொடுத்துவிட்டது என சிலர் புளகாங்கிதம்அடைகிறார்களே?

    வரலாறு காணாதஜனநாயக மோசடியைஅரங்கேற்றியிருக்கும்ஜெயலலிதாவின்வழித்தோன்றல்களானஇபிஎஸ், ஓபிஎஸ் மற்றும்தினகரன் தரப்புகளை காறி உமிழ வேண்டியவர்கள் அதைச்செய்யாமல், கறைபடியாத திமுகமீது சந்தடி சாக்கில் புழுதி வாரிதூற்றுகிறார்கள். இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைவதும், டெபாசிட்டைப் பறிகொடுப்பதும் வழக்கமான ஒன்றுதான். இது, ஏதோ இப்போதுதான் முதல் முறையா நடக்கிறதாகவோ, இல்லை திமுகவுக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதாகவோ நினைத்தால் அது அவர்களின் அறியாமை. 2016 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அதிமுக அப்போது குமரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது. அதுபோலவே பெண்ணாகரம் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக3வது இடத்திற்குத்தள்ளப்பட்டுடெபாசிட்டையும் பறிகொடுத்தது.

    பின் தங்கிய திமுக

    பின் தங்கிய திமுக

    #களப்பணியில் திமுக பின்தங்கிவிட்டது என கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி?

    களப்பணி எதிலும் திமுக பின் தங்கிவிடவில்லை. "பணம் கொடுப்பதில்தான் பின்தங்கியது". ஓட்டுக்கு பணம்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால் தோல்வியே என்றாலும் அதைப் பற்றி அவர் கவலைபடப் போவதில்லை. திமுகவிற்கு எந்தவித இழப்பும் கிடையாது. விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மக்களுக்கான ஒரு நல்ல அரசியலை ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்ல முனைகிறார். இந்தநிலையில் அவரது கரங்களுக்கு வலு சேர்க்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

    தினகரன் நிலை

    தினகரன் நிலை

    #மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பதாலேயே மக்கள் தினகரனுக்கு அபரிமிதமான ஆதரவு தந்திருப்பதாக சிலர் கூறுகிறார்களே?

    அவர் எந்தக் காலத்திலும் பாஜகவை நேரடியாக எதிர்த்ததில்லை. மதவாத சக்திகளுடன் மல்லுகட்டுவதற்கு அவர் ஒன்றும் திராவிடக் கொள்கைகளின் வார்ப்படம் அல்ல. கொள்ளையடித்து சேர்த்துவைத்திருக்கும் பணத்தைக் குறிவைத்து மத்திய அமைப்புகள் அவர்மீது அம்புகளை பாய்ச்சுகின்றன. அதனால் தினகரன், பாஜகவுக்கு பரம எதிரி என்கிற தோற்றப்பிழை ஏற்பட்டிருக்கிறது. நாளையே ஏதாவது அட்ஜஸ்மெண்ட் ஆகிவிட்டால். பாஜகவிடம் சரண்டர் ஆக கொஞ்சமும் தயங்கமாட்டார். ஜனாதிபதி தேர்தலின்போது, வாண்டடாக பாஜக வண்டியில் ஏறி அதற்கு ஆதரவு கொடுத்தவர் தினகரன் என்பதை மறந்துவிடக் கூடாது.

    இஸ்லாமிய வாக்குகள்

    இஸ்லாமிய வாக்குகள்

    # மோடி, கலைஞரை சந்தித்ததால், இஸ்லாமிய வாக்குகள் விலகிச் சென்றதாகக் கூறப்படுவது பற்றி?


    மிகவும் கீழ்த்தரமான கண்ணோட்டம். மோடியுடன் கொள்கை ரீதியாக திமுகவிற்கு ஆயிரம் கருத்துவேறுபாடுகள் உண்டு. எனினும், நாட்டின் உயர்ந்த பதவியிலிருக்கும் ஒருவர், உடல் நலிவுற்றிருக்கும் கருணாநிதியை காண விரும்பும் பட்சத்தில், குறுக்கே விழுந்து தடுக்கவா முடியும்? அப்படித் தடுப்பதும் எந்த வகையில் சரியாகும்?
    மோடி சந்திப்பிற்கு பிறகு திமுக நிலைப்பாட்டில் அப்படியென்ன தலைகீழ் மாற்றம் வந்துவிட்டது? மத்திய பாஜக அரசின் மக்கள்விரோத செயல்களை ஸ்டாலின் அளவிற்கு நாள்தோறும் கடுமையாக விமர்சிப்பவர்கள் இங்கு வேறு யாரேனும் உண்டா?

    அரசியலில் தெளிவு

    அரசியலில் தெளிவு

    #ஆர்கே நகர் முடிவுகள் தமிழக அரசியலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

    உண்மையில் இந்த முடிவு திமுகவை விட, அதிமுகவுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.விஸ்வரூபமெடுக்கும் அதிகார மோதல், கட்சியையும், ஆட்சியையும் நிச்சயம் காவு வாங்கும். அதன்பின்னர் குழம்பியக் குட்டையாகக் காட்சியளிக்கும் தமிழக அரசியல் களத்தில் தெளிவு பிறக்கும்.

    English summary
    A message is on rounds in Whatsapp and it clarifies about the bad defeat in RK Nagar by election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X