For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணைக் கொலை எதற்காக செய்யப்படுகிறது?... அவசியம் தானா இது? #Euthanasia

கருணைக் கொலைக்கு அனுமதி கொடுத்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ள உச்சநீதிமன்றம். இந்த நிலையில் கருணைக் கொலை எதற்காக செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்யலாம்..சுப்ரீம் கோர்ட் அதிரடி- வீடியோ

    சென்னை: கருணைக் கொலைக்கு அனுமதி கொடுத்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ள உச்சநீதிமன்றம். மக்கள் கண்ணியமான முறையில் இறப்பதற்கு உரிமை உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கருணைக் கொலை எதற்காக செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

    ஒருவர், எந்த ஒரு மருத்துவ சிகிச்சைகள் வாயிலாகவும் சரிசெய்யப்பட முடியாத ஒரு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, அந்நோயினால் மிகுவும் துன்பப்படுகிறார் என்றால், வேறு எந்த நடவடிக்கை வாயிலாகவும் அவரை விடுவிக்க இயலாத வேளையில் அவரை அத்துன்பத்திலிருந்து விடுவிக்க, அவரைக் மருந்துமூலம் இறந்துவிடுமாறு "கொலை" செய்யும் ஒரு நடைமுறைக்கே கருணைக் கொலை என்று பெயர்.

    What is passive killing, will it be acceptable?

    ஆனால் உலக நாடுகளில் பல கருணைக்கொலையை ஆதரிக்காததன் காரணம் சில சமயங்களில் சொத்துக்காகவோ அல்லது சொந்த ஆதாயத்திற்காகவோ சிலர் இதை அடுத்தவரை கொலை செய்ய உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடும் என்பதால் தான். ஒருவேளை கருணைக்கொலை அனுமதிக்கப்பட்டால், பல குடும்பங்களில் பெற்றோரையே சட்டப்படி கருணைக்கொலை செய்யும் வாரிசுகள் பலர் உருவாகிவிட வாய்ப்பும் உண்டு என்பதால் இந்தியாவில் கருணைக் கொலைக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்படவில்லை.

    கருணைக் கொலைகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு துன்புறுவோரையும் இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படும் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நோயாளிகளை துன்பம் இல்லாமல் கொல்வது கருணைக் கொலை எனப்படுகிறது. கருணைக் கொலை செய்வதை அதற்காக, நடவடிக்கை எடுப்பது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்று இருவகையாக பிரித்துள்ளனர்.

    மருத்துவர்களோ அல்லது வேறு நபர்களோ (மருத்துவ உதவியாளர்கள்) நோயாளி மரணமடைவதற்காக திட்டமிட்டு (விஷ ஊசி போடுவது) செய்வது.
    நோயாளி உயிர் வாழ்வதற்காக செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருப்பது அல்லது செய்து கொண்டிருப்பதை நிறுத்துவது. செயற்கை சுவாசத்தை நிறுத்துவது உள்ளிட்டவை கருணைக் கொலைகளாக பார்க்கப்படுகின்றன.

    கருணைக்கொலைகள் செய்ய வேண்டும் என்று மனிதாபிமான அடிப்படையில் பலர் நீதிமன்ற படிகளை ஏறிய போது சட்ட அனுமதி தராத உச்சநீதிமன்றம் முதல் முறையாக மனிதன் கண்ணியமாக இறப்பதற்கு உரிமை உள்ளதாகக் கூறி கருணைக் கொலைக்கு சட்ட அனுமதி அளித்துள்ளது.

    English summary
    What is passive killing under what circumstances one can approach legal superiors for it?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X