ஒரு விளம்பரம்! இனி வாட்ஸ் ஆப்பிலும் உங்களை விளம்பரங்கள் டிஸ்டர்ப் செய்ய போகிறது மக்களே!
வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனில் இன்னும் சில நாட்களில் விளம்பரங்கள் வரும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை: வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனில் இன்னும் சில நாட்களில் விளம்பரங்கள் வரும் என்று கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் பேஸ்புக் கைக்கு சென்ற பின் நிறைய மாற்றங்களை சந்தித்து வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக நிறைய அப்டேட்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது பொருளாதார ரீதியாகவும் வாட்ஸ் ஆப்பில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி வாட்ஸ் ஆப்பில் விளம்பரங்கள் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருமானத்தில் கவனம் செலுத்தாது
வாட்ஸ் ஆப் நிறுவனம் தொடங்கியதில் இருந்தே விளம்பரத்தில் கவனம் செலுத்தியது கிடையாது. மக்களை இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே வாட்ஸ் ஆப் செயல்பட்டு வந்தது. இதன் காரணமாகவே அந்த ஆப் உலகம் முழுக்க பிரபலம் ஆனது.

வாட்ஸ் ஆப் வருமானம் எப்படி வருகிறது
இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பிற்கு இரண்டு இடங்களில் இருந்து மட்டுமே வருமானம் வருகிறது. இதற்கு முன் வாட்ஸ் ஆப்பிற்கு பிளே ஸ்டோர் டவுன்லோடில் இருந்து லட்சக்கணக்கில் வருமானம் வந்தது. பேஸ்புக் கைக்கு சென்ற பின் ஷேர் மார்க்கெட்டில் இருந்தும் நிறைய வருமானம் வந்தது.

என்ன செய்யும்
இதன் தொடர்ச்சியாக தற்போது விளம்பரம் மூலம் சம்பாதிக்க இருக்கிறது வாட்ஸ் ஆப் நிறுவனம். அதன் ஒரு படியாக வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி விளம்பரங்களை பார்க்கலாம். பேஸ்புக்கில் எப்படி பல இடங்களில் விளம்பரம் இருக்கிறதோ அதேபோல் வாட்ஸ் ஆப்பில் விளம்பரங்களை பார்க்கலாம்.

எப்படி நடக்கும்
வாட்ஸ் ஆப்பில் சில நாட்களுக்கு முன் ஸ்டோரி அப்டேட் செய்யும் வசதி வந்தது. ஒருநாள் மட்டுமே இருக்கும் ஸ்டேட்டஸ்கள் ஆகும் இது. இந்த நிலையில் இங்குதான் விளம்பரங்கள் வரும். ஒரு ஸ்டேட்டசுக்கும் இன்னொரு ஸ்டேட்டசுக்கும் இடையில் விளம்பரம் வரும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் இந்த வருட இறுதியில் வர உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications