For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலுக்கு வருவது என்றாகிவிட்டது.. ரஜினி மக்களை சந்திப்பது எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது என்றாகிவிட்ட நிலையில் அவர் மக்களை சந்திப்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றாகி விட்டதால், அவர் மக்களை சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக அரசியலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் கூட மறைமுகமாக அரசியலில்தான் இருந்தார் ரஜினிகாந்த். நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தார். அவர் அரசியலில் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு தேர்தலின் போது அவரை அரசியல்வாதியாகவே அவரது ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை போக்க ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். ரஜினியும் அந்த மூடுக்கு வந்து விட்டார்.

பொது வாழ்க்கை

பொது வாழ்க்கை

பொதுவாக அரசியல் தலைவர்கள் என்னதான் பிரபலமாக இருந்தாலும் மக்களோடு மக்களாக இருந்தால் மட்டுமே அவரால் ஜெயிக்க முடியும். மக்களின் நாடி துடிப்புக்கேற்ப பணியாற்ற முடியும். இதே யுத்தியைதான் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோர் பின்பற்றி வந்தனர்.

ரசிகர்கள் என்ற குறுகிய வட்டம்

ரசிகர்கள் என்ற குறுகிய வட்டம்

நடிகராக இருக்கும் வரை ரஜினிகாந்த் தனிமையையோ, ரசிகர்கள் என்ற குறுகிய வட்டத்தையோ விரும்பியிருக்கலாம். ஆனால் பொதுவாழ்க்கைக்கு என்று வந்து விட்டால் மக்களை சந்திக்க வேண்டும். தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளுக்கு ரஜினி இதுவரை வாய்ஸ் கொடுக்கவில்லை என்ற பெரும் ஆதங்கத்தில் மக்கள் உள்ளனர். எனவே அவர்களை சந்தித்து தமிழக மக்களுக்கு செய்ய விரும்பும் திட்டங்களை அவர் எடுத்துரைக்க வேண்டும்.

நிர்வாகிகள் ஆவன செய்வரா?

நிர்வாகிகள் ஆவன செய்வரா?

அரசியலுக்கு இறங்குவது என்று ரஜினிகாந்த் சூசகமாகத்தான் தெரிவித்துள்ளார். அவர் மனதில் என்ன உள்ளது என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க ஏற்பாடு செய்த நிர்வாகிகள். அவர் பொதுமக்களை சந்திப்பதற்காக சூறாவளி சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்வரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெற்றி பெற முடியும்

வெற்றி பெற முடியும்

நடிகனாக ரஜினிகாந்த்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். சூப்பர் ஸ்டாராக தூக்கி வைத்து கொண்டாடினர். அதேவேளையில் தன்னை பச்சைத் தமிழன் என்று கூறிக் கொள்ளும் ரஜினிகாந்த், அவரது மூதாதையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர்கள், சிவாஜிராவ் கெய்க்வாட்டாக இருந்த வரையில் சிறிய வயதில் நாச்சிக்குப்பத்துக்கு வந்து சென்ற ரஜினி காந்த், சூப்பர் ஸ்டார் ஆன பிறகு, ஒரு முறை வந்தது கிடையாது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

ரஜினி பார்க்க ஆவல்

ரஜினி பார்க்க ஆவல்

மேலும் அக்கிராம மக்களும் ரஜினிகாந்தை பார்க்க ஆவலுடன் உள்ளனர். நாச்சிக்குப்பத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை ரஜினி தொடங்க வேண்டும். பார் கோடுடன் கூடிய கார்டுகள் இல்லாமல் அனைத்து தரப்பினரையும் சந்திக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

பரிசீலிப்பாரா ரஜினி

English summary
Rajinikanth is all set enter into politics. But people want him to meet them and spell out his plans first.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X