For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்னும் சினிமாவிலேயே புக் ஆகிக் கொண்டிருந்தால் அரசியல் எப்ப தலைவா.. ஆல்ரெடி டூ லேட்!

இன்னும் சினிமாவிலேயே புக் ஆகிக் கொண்டிருந்தால் அரசியலுக்கு எப்பதான் ரஜினி வருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சினிமாவிலேயே நடித்து கொண்டிருந்தால் அரசியலுக்கு எப்போது வருவார் ரஜினி?- வீடியோ

    சென்னை: இன்னும் சினிமாவிலேயே அடுத்தடுத்து புக் ஆகி கொண்டிருந்தால் எப்பதான் அரசியலுக்கு ரஜினி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமல்லாது நடுநிலையாளர்களிடமும் உள்ளது.

    ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். ஆனால் அறிவிப்போடு சரி. அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன என்று மட்டுமே ரஜினி கூறி வருகிறார்.

    செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட நேரம் வரட்டும் நேரம் வரட்டும் என்றே கூறிவருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக ரஜினியை அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் அழைத்து வந்த நிலையில் அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று கூறியே காலம் தாழ்த்தினார்.

    அவசரம்

    அவசரம்

    கட்சி ஆரம்பிக்கலாம் என ரஜினியே ரசிகர்கள் சந்திப்பின்போது கூறியதால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் அறிவித்து 7 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் கட்சி தொடங்குவதற்காக அறிகுறியே இல்லை. நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி தொடங்குவீர்களா என்று அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது என்ன அவசரம் என்று செய்தியாளர்களை கேள்வி எழுப்புகிறார் ரஜினி.

    தொடர்ந்து படத்தில் புக்கிங்

    தொடர்ந்து படத்தில் புக்கிங்

    தற்போது ரஜினி நடிப்பில் காலா படம் வெளியாகியுள்ளது. அது அந்தளவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாவதாக இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். இந்நிலையில் கார்த்தி சுப்புராஜின் படத்திலும் கே எஸ் ரவிக்குமாரின் படத்திலும் ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார்.

    கருத்து கணிப்பு முடிவுகள்

    கருத்து கணிப்பு முடிவுகள்

    யோசிக்கலாம் யோசிக்கலாம் என்று கூறியே 20 ஆண்டுகளை தாழ்த்திவிட்ட ரஜினி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாவது கட்சி தொடங்குவார் என்று பார்த்தால் அதற்கும் பிடிகொடுக்காமல் பேசுகிறார். ஏன் இந்த குழப்பமான நிலை. அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதற்கே 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நீங்கள் கட்சியை தொடங்குவதற்கும் இதே காலத்தை எடுத்துக் கொண்டால் மிகவும் கஷ்டம் தலைவா. தந்தி டிவியில் நடந்த கருத்து கணிப்பில் ரஜினிகாந்த் அரசியலில் சாதிக்க முடியாது என்று ரசிகர்களுக்கு பகீர் அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.

    எதிலும் ஈடுபடாமல்

    எதிலும் ஈடுபடாமல்

    இப்படியே கட்சி தொடங்குவதற்கு குழம்பிக் கொண்டே இருந்தால் அதில் மீன் பிடிக்கத்தானே பலர் முயற்சிப்பர். லிங்கா, கோச்சடையான், கபாலி, காலா ஆகிய படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின. இந்த திரைப்படங்களை ரசிகர்கள் ஓடவைத்தனர் என்றே சொல்லலாம். அப்படியிருக்கையில் கைவசம் இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படியே திரைப்படங்களில் புக் ஆகிக் கொண்டேயிருந்தால் எப்போதுதான் அரசியலுக்கு வருவது.

    காமராஜரை உருவாக்குவது எப்போது

    காமராஜரை உருவாக்குவது எப்போது

    காமராஜர் மீண்டும் தமிழகத்துக்கு வர வேண்டும் என்பதே தனது ஆசை என்று தெரிவித்த ரஜினி அதை எப்போதுதான் செயல்படுத்துவார்? தொடர்ந்து மக்கள் பணிகளிலும் ஈடுபடாமல் உள்ள இவர் அமைதி காத்து மேலும் மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொள்கிறார். ரஜினி என்றால் அதிரடியாக இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று காலா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நீங்கள் கூறினீர்கள். அப்படியிருக்கும் போது இதோ அதோ என்று அரசியல் கட்சி தொடங்குவதை இழுத்து கொண்டேயிருந்தால் இது உங்களுக்கே சரியா.

    இத்தனை யூகங்கள்

    இத்தனை யூகங்கள்

    ரஜினியாகவே வாயை திறந்து எப்போது கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று கூறுவதற்கு பதில் ரசிகர்களாகவே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார். இல்லை இல்லை நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகே கட்சியை தொடங்குவார் என்று பேசிக் கொள்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை காண உங்களுக்கு ஆர்வம் உள்ளதோ இல்லையோ எங்களுக்கு உள்ளது தலைவா. தமிழக சிஸ்டத்தில் உங்களால் மாற்றம் வர வேண்டும் என்பதே கோடானு கோடி ரசிகர்களின் வேண்டுகோளாகும். மக்களை (ரசிகர்கள்) உடனே கூட்டுங்கள். கட்சியை உடனே தொடங்குகள்....

    English summary
    When will Rajinikanth enters in to Politics as the survey is against to him. He is being booking in cinemas continuously.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X