காதல் இசையில் கிங் யாரு? அசத்தல் கருத்து கணிப்பு முடிவுகளை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் இசையில் "கிங்" யாரு? என 'ஒன்இந்தியாதமிழ்' நடத்திய கருத்துக் கணிப்பில் சுவாரசிய முடிவுகள் வெளியாகியுள்ளன.

காதலர் தினத்தை முன்னிட்டு, நமது தளத்தில், நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்து கணிப்பில் திரைப்பட முன்னணி இசையமைப்பாளர்கள் பெயர்கள் ஆப்ஷன்களாக தரப்பட்டன.

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, ஜி.வி.பிரகாஷ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஹிப்ஹாப் தமிழா, டி இமான், ராஜா.. எப்பவுமே இளையராஜாதான், என் பேவரைட் இந்த லிஸ்டில் இல்லைங்க என இத்தனை ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன.

காதல் நாயகன்

காதல் நாயகன்

இதில், பம்பாய், அலைபாயுதே உள்ளிட்ட பல காதல் சப்ஜெக்ட் படங்களுக்கு பின்னணி இசையிலும், பாடல்களிலும் உயிர் கொடுத்த ஆஸ்கர் நாயகன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 26.23 சதவீத ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம், இந்த பட்டியலில் ரஹ்மானுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

காதல் ரசம் பாடல்கள்

காதல் ரசம் பாடல்கள்

மின்னலே, காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல காதல் சப்ஜெக்ட் படங்களில், காதல் ரசம் பிழிய பாடல்களை அள்ளிக்கொடுத்த ஹாரிஷ் ஜெயராஜ் 4.12 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

காதல் பாடல்களில் தேவா

காதல் பாடல்களில் தேவா

1990களில், பல முன்னணி ஹீரோ படங்களுக்கு முதுகெலும்பாக இருந்து அவர்கள் காதல் கீதங்களுக்கு ராகம் அமைத்த தேவாவை இப்போது வாசகர்கள் மறந்துவிட்டார்கள் போலும். 0.73 சதவீத வாக்குகளை தேவா பெற்றுள்ளார். காதல் பாடலை விட கானா பாடல்கள் என்றால்தான் சட்டென தேவா நினைவு வந்துவிடும் போல நமது ரசிகர்களுக்கு.

ஜி.வி.பிரகாஷ், அனிருத்

ஜி.வி.பிரகாஷ், அனிருத்

ஹீரோ அவதாரம் எடுத்துள்ள இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷுக்கு 1.32 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அதிரடி இசையமைப்பாளர் அனிருத்துக்கு ஆதரவாக 2.07 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

3வது இடம் யுவனுக்கு

3வது இடம் யுவனுக்கு

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல பேக்ரவுண்ட் மியூசிக்கிலும், பாடல்களிலும் பட்டையை கிளப்பும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரஹ்மானுக்கு அடுத்த இடம் கொடுத்து கவுரவித்துள்ளனர் நமது வாசகர்கள். அவர் 6.62 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இயக்குநர் செல்வராகவனின் படங்களுக்கு இவர் அமைத்த இசைகள் சட்டென வாசகர்கள் நினைவிற்கு வந்திருக்குமோ?

வளரும் கலைஞர்கள்

வளரும் கலைஞர்கள்

வளர்ந்துவரும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவுக்கு 0.53 சதவீதம் பேரும், மைனா உள்ளிட்ட படங்களில் காதலை வார்த்தெடுத்து இசை வடித்த டி.இமானுக்கு 1.36 சதவீத வாசகர்களும் ஆதரவு அளித்துள்ளனர். இந்த லிஸ்டில் என் பேவரைட் இல்லைங்க என்பவர்கள் 2.57 சதவீதம் பேர்.

என்றுமே ராஜா, ராஜாதான்

என்றுமே ராஜா, ராஜாதான்

இந்த பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளவர் இசைஞானி இளையராஜா. 54.45 சதவீதம் பேர் இளையராஜாதான் காதல் கீதங்களின் நாயகன் என வாக்களித்துள்ளனர். அதாவது வாக்களித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சாய்ஸ் இளையராஜாதான். சும்மாவா சொல்றாங்க, ராஜா.. எப்பவுமே ராஜாதான் என்று!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Who is "King" in love music? According to the opinion poll conducted by "OneIndia Tamil", interesting findings have emerged.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற