தென் இந்தியாவுக்கு கவர்ச்சி நடிகை, வட இந்தியாவுக்கு பட்டர் சிக்கன்.. பதற வைக்கும் கூகுள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் இந்தியன் மசாலா என்று தேடினால் நடிகைகள் போட்டோக்களையும், நார்த் இந்தியன் மசாலா என்று தேடினால், மசாலா பொருட்களையும் கூகுள் காண்பிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகம் இருந்தால் South Indian masala என்று கூகுளில் டைப் செய்து இமேஜ்களை பாருங்கள். முழுக்க நடிகைகளின் கவர்ச்சி படங்கள் இடம் பெற்றுள்ளன. அதுவே, North Indian masala என்று டைப் செய்து பாருங்கள், பட்டர் சிக்கன், சாட் மசாலா மற்றும் பல்வேறு மசாலா பொருட்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

கூகுள் ஏன் இவ்வாறு காண்பிக்கிறது? தென் இந்திய பெண்கள் என்றால் அவர்களை மசாலாவோடு ஒப்பிட்டு அசிங்கப்படுத்துகிறதா? என்ற கேள்வி எழலாம்.

கூகுள் மீது தப்பில்லை

கூகுள் மீது தப்பில்லை

வட இந்தியா-தென் இந்தியா மோதலின் டிஜிட்டல் நகர்வு இந்த படங்கள் என்று போராளிகள் இதை வர்ணிக்கவும் செய்யலாம். ஆனால் அப்படி ஏதும் அவசரப்பட்டுவிடாதீர்கள். ஏனெனில் கூகுள் மீது தப்பில்லை. நம்மவர்கள்தான் சரியில்லை.

மன ஓட்டம்

மன ஓட்டம்

புரியவில்லையா..? ஆம், நமது உள்ள கிடக்கைத்தான் கூகுகள், நிலைக்கண்ணாடி போல பிரதிபலிக்கிறது. நமது வக்கிர எண்ணங்கள்தான் கூகுள் இமேஜில் பிரதிபலிக்கிறதே தவிர, இதில் கூகுளாரை சொல்லி குற்றமில்லை.

அப்லோடு செய்வோர் தப்பு

அப்லோடு செய்வோர் தப்பு

கூகுள் தரப்பில் இதுகுறித்து விளக்கம்கேட்டபோது அவர்கள் கூறியது இதுதான்: வேண்டுமென்றே தென் இந்திய நடிகைகளை நாங்கள் காட்டவில்லை. நடிகைகள் படங்களை அப்லோடு செய்யும்போது, தென் இந்திய நெட்டிசன்கள், அதில் மசாலா என்ற 'டேக்'கை சேர்த்துவிடுகிறார்கள். எனவே மசாலா என்றாலே பெண்தான் என்ற மனநிலைக்கு கூகுள் வர வேண்டியுள்ளது.

மசாலா பொருட்கள்

மசாலா பொருட்கள்

வட இந்திய நெட்டிசன்கள், கடையில் விற்கும் மசாலா பொருட்கள் போட்டோக்களை அப்லோடு செய்யும்போதுதான் அந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். எனவே கூகுளும் அப்படியே காட்டுகிறது. இருப்பினும் இந்த நிலையை மாற்ற எங்கள் டெக்னிக்கல் டீம் வேலை செய்து வருகிறது. விரைவில் அதை எப்படி சரி செய்வது என்பதை கண்டறிவோம். இவ்வாறு கூறுகிறார்கள் கூகுள் தரப்பில்.

மாறவேண்டும் மனநிலை

மாறவேண்டும் மனநிலை

'Masala', 'mirchi', 'item' இதுபோன்ற வார்த்தைகளை பெண்களின் படத்தோடு இணைத்து பார்ப்பது தென் இந்தியர்கள் வாடிக்கையாக உள்ளது. எனவே மாற்றம், கூகுளிடமிருந்து அல்ல.., முதலில் நம்மிடமிருந்துதான் வர வேண்டும் என்கிறார்கள் பெண்ணியவாதிகள். எந்திரன் திரைப்படத்தில் மோசமான கேரக்டர்களை பதிவு செய்து அந்த 'சிப்'பை, சிட்டி ரோபோவில் சொருகிவிட்டதும், அது வில்லத்தனம் செய்யுமே, அதுபோலத்தான் கூகுள். 'வில்லன் விஞ்ஞானிகள்' திருந்துவார்களா?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
When you type 'North Indian masala' on Google images, you get the obvious results. However, that's not what shows when you type 'South Indian masala'.
Please Wait while comments are loading...