For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழைக்கெல்லாம் இடைத் தேர்தலை ஒத்திவைப்பது ஏற்புடையது இல்லை- வைகோ பேட்டி

Google Oneindia Tamil News

திருச்சி: இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது ஏற்புடையது இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டி: தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை காரணம் காட்டி இடைத்தேர்தல் ஒத்தி வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

Why by polls postponed asks Vaiko

1979 - 80களில் கடும் பனிக்காலத்தில் கூட, நாடு முழுவதும் பொதுத்தேர்தல் நடந்துள்ளது. இந்த மழைக்காக, தேர்தல் நடத்தவில்லை என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல.

ஆனால், ரெட் அலர்ட் என்பது அதிமுக சூழ்ச்சி என்று சொல்ல முடியாது. வானிலை ஆய்வு மைய அறிவிப்புக்கும், தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறேன்.

தேர்தல் ஆணையத்துக்கென அதிகாரங்கள் உள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்பு தள்ளி வைத்ததற்கான காரணம் தான் ஏற்க முடியவில்லை. பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக, ஆளுநர் குற்றம் சாட்டுவது இதுவே முதல் முறை.

English summary
Why by polls postponed asks Vaiko while giving press meet in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X