மத்திய அரசுக்கு எதிரால்லாம் நான் பேசலிங்க.. ரஜினி ஏன் இப்படி டிவிட்டினார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த டிவிட்டில் மாநில அரசு என்பதை கொட்டை எழுத்தில் எழுதி, சமிக்ஞை கொடுத்துள்ளார் அவர்.

சினிமா திரையரங்குகளை மத்திய அரசு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதிக்கப்படுகிறது.

கேளிக்கை வரி மீதான வரியையும் சேர்த்தால் மொத்த வரி 60 சதவீதத்தை தாண்டுகிறது. இதனால் தமிழகம் முழுக்க திங்கள்கிழமை முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

ரஜினி டிவிட்

இதுகுறித்து ரஜினி வெளியிட்டுள்ள டிவிட்டில், தமிழக அரசு தங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசுஎன்பதை மட்டும் பெரிய எழுத்தில் போட்டுள்ளார். அதாவது மத்திய அரசை அவர் எதிர்க்கவில்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

புது இந்தியா

பணமதிப்பிழப்பு அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம், பிரதமர் மோடி வெளியிட்ட தினத்தன்று இரவோடு இரவாக, புது இந்தியா பிறந்துவிட்டது என டிவிட் செய்தவர் ரஜினி.

மக்கள் சிரமம்

மக்கள் சிரமம்

மக்கள் வங்கிகளில் நீண்ட கியூவில் நின்று பணத்தை மாற்ற சிரமப்பட்டபோது, ரஜினி இவ்வாறு செய்திருந்த டிவிட் சர்ச்சையையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இப்போதும், கேளிக்கை வரி என்று நேரடியாக சொல்லாமல், மாநில அரசு என்பதை கொட்டை எழுத்தில் போட்டுள்ளார். இதன்மூலம், ஜிஎஸ்டி விவகாரத்தில், மத்திய அரசை தான் பகைக்க விரும்பவில்லை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் ரஜினி.

அடக்கி வாசிக்கும் ரஜினி

அடக்கி வாசிக்கும் ரஜினி

கமல் உள்ளிட்ட சில நடிகர்கள், ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று நேரடியாக மத்திய அரசுக்கு கோரிக்கைவைத்துள்ள நிலையில், ரஜினி கேளிக்கை வரியோடு தனது கோரிக்கையை சுறுக்கிக்கொண்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Why Rajinikanth raises his voice against only on entertainment tax levied by Tamilnadu government.
Please Wait while comments are loading...