உங்க முடிவை நாங்க ஏன் எடுக்கணும்.. சிறுமைப்படுத்தாதீங்க ப்ளீஸ்.. கம்யூனிஸ்ட்களுக்கு வன்னிஅரசு பதிலடி

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாக போகிறது. இடைத்தேர்தல் களம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் தவெக கொண்டு வந்த திட்டங்களை விட அறிவித்து வாபஸ் பெற்ற திட்டங்கள் அதிகமாகி வருகிறது. இடைத்தேர்தல் விஷயத்தில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தேர்தலில் தவெகவுக்கு ஆதரவளித்த விவகாரத்தில் விசிகவை கம்யூனிஸ்ட்கள் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட்களுக்கு அமைச்சல் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.

தர்மபுரியில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி வெல்லும் என்று எங்கள் தலைவர் முதல் நாளில் இருந்து முன்மொழிகிறார். அதைத்தான் நாங்கள் வழி மொழிந்துள்ளோம். தாராபுரம், மதுராந்தகம் தொகுதி மக்களும் அதை வழிமொழிவார்கள். தேர்தல் முடிவு வந்த பிறகு தான் அது தெரியும். எதிர்ப்பு எதிர்ப்பு என்று சொல்வது திட்டமிட்டு கட்டமைக்கப்படும் குளறுபடிகள்.

Vanni Arasu Communists

நாங்க அப்படி சொல்லவில்லையே

எந்த இடத்திலும் எதிர்ப்புகள் இல்லை. வரவேற்பு தான் அதிகமுள்ளது. அது எங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக இடதுசாரிகள் எடுக்கும் முடிவை ஒட்டி விசிக முடிவு எடுக்கும் என எங்கள் தலைவர் சொன்னார். எல்லா முடிவையும் எடுப்போம் என்று சொல்லவில்லை. ஆட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இடதுசாரிகள் எடுக்கும் முடிவை ஒட்டி எடுப்போம் என்று மட்டுமே கூறினோம்.

அதே முடிவை எடுப்போம் என்று நாங்கள் கூறவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் உள்ள திருப்புவாதிகள் பலரும் இதை திரித்து பேசுகிறார்கள். ஒரு கட்சி எடுக்கும் முடிவையே எடுப்பதற்கு எதற்கு இன்னொரு கட்சி இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட்கள் மட்டுமல்ல விசிகவும் இடதுசாரி கட்சி தான். இந்தியளவில் அம்பேதத்கர், பெரியாரை ஏற்று கொண்ட ஒரு இடதுசாரி இயக்கம் நாங்கள்.

சிறுமைப்படுத்த வேண்டாம்

அதில் எடுக்கும் முடிவை ஒட்டி நாங்கள் முடிவு எடுப்போம் என கூறினோம். அது முடிந்துவிட்டது. எங்களுக்கு என்று ஒரு கட்சி, தலைவர், கொடி இருக்கிறது. நாங்களும் முடிவு எடுக்க வேண்டும். எங்களை அப்படி சொல்வதே சிறுமைப்படுத்துவதாக பார்க்கிறோம். இதுபோல திருப்புவாதங்களை அவதூறு பரப்புவோர் நிறுத்தி கொள்ள வேண்டும். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட போகிறதா அல்லது பாமக சௌமியா அன்புமணி அமைச்சரவையில் இடம் போகிறாரா என்று எங்களுக்கு தெரியாது. அதைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்.

அனைவரும் தவறை சுட்டி காட்டியவுடன் பிடிவாதமாக இல்லாமல், மக்கள் குரலுக்கு மதிப்பளித்து வாபஸ் பெறுவது வரவேற்கத்தக்கது. ஜோதிடர், தலைமை செயலகம், ஆர்டிஐ விலக்கு எல்லாம் அதற்கு முன் உதாரணம். மக்கள் கோரிக்கைகளை ஏற்பது முதலமைச்சரின் முதிர்ச்சியான முன்னெடுப்பு" என்று கூறினார். வன்னி அரசின் பேட்டி அரசியல் சூட்டை அதிகரிக்க செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+