பஸ் ஸ்டிரைக் ஏன்? சமூக வலைதளங்களில் பரவும் கருத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுக்க அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தப்போராட்டம் ஏன் நடக்கிறது என்றும், சமூக வலைத்தளங்களில் பரவிவரும் எதிர் விமர்சனங்களுக்கு பதில் அளித்து உண்மை நிலையை விளக்கும் வகையிலும் போராட்டக்காரர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள அந்தப்பதிவு...

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த பலவேறு தகவல்கள் ஆதரவாகவும் எதிராகவும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து பதிவிடப்படுகிறது. முதலில் போக்குவரத்துதொழிலாளர்களின் இந்தவேலைநிறுத்த அறிவிப்பு என்பது அவர்களில் சுயநலன் சார்ந்து அல்ல என்பதை கருத்து பதியும் நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Why Transport workers strike, True reason behind the strike

1- போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை (பி.எப்./எல் ஐ சி./ஆர் டி/கடன் சொசைட்டி)இப்படி எந்த பணமும் அந்தந்த நிறுவனங்களுக்கு பலவருடங்களாக நிர்வாகங்கள் செலுத்தவில்லை.

2- அரசு அறிவித்த சலுகைககள் (இலவச பயண அட்டைகள், எம் எல் ஏ.எம்பி.மாற்றுத்திறனாளி, நோயாளிகள்) காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பு அரசு கழகங்களுக்கு வழங்கவில்லை.

3- பள்ளிகுழந்தைகளுக்கு அரசு அறிவித்த இலவசபஸ் பயணத்திற்கான செலவில் போக்குவரத்துகழகங்கள் ஏற்றுக்கொண்ட தொகைபோக மீதி தொகை வழங்கப்படவில்லை.

4- பணிஓய்வு பெற்று செல்லும் தொழிலாளர்ளுக்கு அவர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய கிராஜிவிட்டி(பணிக்கொடை)பிஎப்;விடுப்பு ஒப்படைப்பு சம்பளம்;மருத்துவ தொழிற்நுட்ப கல்லூரிகளுக்கு தொழிலாளி செலுத்திய பங்குதொகை எதுவும் வழங்காத நிலை.

5- தொழிலாளர்களுக்கு தொழிலாளர்நீதி மன்றம் வழங்கும் தீர்ப்புகள் காரணமாக கிடைக்கவேண்டிய நிலுவை தொகைகள்.

6- நிர்வாக தண்டனைகள் மற்றும் பே-அனாமலியால் ஏற்படும் பணபலன்கள்.

7- வருடாந்திர ஊதிய உயர்வு ;ஆய்வுபலன்(ரிவியூ)போன்றவற்றால் வரும் பணபயன் நிலுவைகள்.

8- இதற்கெல்லாம் மேலாக விலைவாசி உயர்வை தொழிலாளர்கள் தாங்கமுடியாத நிலையில் அதை ஓரளவாவவது ஈடுசெய்யும் நோக்கில் வழங்கப்படும் பஞ்சப்படி(D.A )உட்பட பணபலன்கள் வழங்கப்படவில்லை.

9-மத்தியஅரசு பின்பற்றிவரும் நாசகர பொருளாதார கொள்கைககள் காரணமாக கட்டுபாடின்றி ஏறிவரும் டீசல் விலைஉயர்வை ஈடுகட்ட அரசு உதவி மறுக்கப்படுகிறது.

10-அரசு சேவைத்துறை நிறுவனமான போக்குவரத்து கழகம் சுங்கசாவடிக்கு (டோல்கேட்)கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது.

11-போக்குவரத்துக்கழக பேருந்துகள் காப்பீடு (இன்சூரன்ஸ்)செய்யப்படாததால் கோடிகணக்கான ரூபாய் விபத்து இழப்பீடு வழங்கும் நிலை.

12-அரசு விழாக்களுக்காக தேவையற்றவகையில் திட்டமிடல் ஏதுமின்றி ஒரேநேரத்தில் ஒரேகழகத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்குவதால் ஏற்படக்கூடிய தேவையற்ற செலவீனங்கள்.

13 -தகுதிசான்று(FC)என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகை.

14-அனுமதி இல்லாத ஆம்னி பேருந்து மற்றும் தடம்மாறி இயக்கும் மினிப்பேருந்துகளால் ஏற்படுத்தப்படும் இழப்பு.

15 -எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வெருநாளும் வரவுக்கும் -செலவுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தால் ஏற்படும் 5-கோடி இழப்பு...

இன்னும் சொல்லமுடியும் இப்படி எதுகுறித்தும் கவலைபடாத அரசுகளால் ஏற்படுத்தப்படும் நஷ்டத்திற்கு இரவும் பகலும் பாராமல் உழைக்கும் தொழிலாளி எப்படி பொறுப்பாக முடியும்.

பணிஓய்வு பெற்றுசெல்லும் நிலையில் தொழிலாளிக்கு சேரவேண்டிய தொகைககளை முடக்கிவைத்து அதைகொண்டு கழக அன்றாட செலவுகளைசெய்வோம் எனசொல்லும் அரசுகளின் நடவடிக்கை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். பொறுமையாக பேசிப்பேசி பலகட்ட போராட்டங்களுக்கு பிறகே வேலைநிறுத்தம் ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு தொழிலாளி வந்துள்ளான்.

இப்போராட்டத்தை இருகரம் நீட்டி வரவேற்று வெற்றிபெறச்செய்வது என்பது நாம் பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்பதாகும்.

மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி தனியார்மயத்திற்கு தூபம் போடும் அரசுகளின் நடவடிக்கையை தொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து முறியடிப்போம். இது சலுகைகேட்கும் போராட்டமல்ல தேசம் காக்கும் போராட்டமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Why Transport workers strike, True reason behind the strike. Workers Explanation for Rumors spreading in social media
Please Wait while comments are loading...