For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பொண்ணுக பேப்பர திருத்தறது குமாரசாமி மாதிரி ஆளுக; பசங்க பேப்பர திருத்தறது குன்ஹா மாதிரி ஆளுக!"

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள இன்று #WhyGirlsGotHighmarks அதாவது மாணவிகள் ஏன் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. 500க்கு 499 மதிப்பெண் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். மேலும் 498 மதிப்பெண்கள் பெற்று 192 பேர் இரண்டாவது இடத்தையும், 497 மதிப்பெண் பெற்று 540 பேர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். வழக்கம் போன்று இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ட்விட்டரில் #WhyGirlsGotHighmarks அதாவது மாணவிகள் ஏன் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அந்த ஹேஷ்டேக்குடன் போடப்பட்டுள்ள சில ட்வீட்கள் இதோ,

பேனா

பரீட்சை மண்டபத்துல
பொண்ணுங்க
விடை தெரியாம பேனாவ கடிச்சு யோசிக்கும்
நம்ம பய
அந்த பேனாவ எப்டி ஆட்டய போடுறதுனு யோசிப்பான்
#WhyGirlsGotHighmarks என கனல் கத்தி என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

மாணவிகள்

#WhyGirlsGotHighmarks ஏனென்றால் அவர் அனைத்தையும் சிறப்பாக செய்பவர்கள்!! படிப்பையும் கூட!!! என்று சைலேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மார்க்

பசங்களுக்கு பாஸ் மார்க்தான் ஹைமார்க்..
பொண்ணுங்களுக்கு சென்டமே பாஸ்மார்க்தான்...

#sslcresults
#WhyGirlsGotHighmarks என்கிறார் வைகை எக்ஸ்பிரஸ்.

பாஸ்

பாஸ் ஆனாலே போதும்ங்குற நல்ல மனசு ஆண்களுக்கு #WhyGirlsGotHighMarks என கருணைமலர் என்பவர் கூறியுள்ளார்.

தெளிவு

அவங்க தெளிவா இருக்கறாங்க.. ஸ்கூலுக்கு வந்தது படிக்கறதுக்குன்னு..#WhyGirlsGotHighmarks என்று நண்பன் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

பசங்க

பொண்ணுங்க புக் பின்னாடி சுத்துறாங்க, பசங்க பொண்ணுங்க பின்னாடி சுத்துறாங்க #WhyGirlsGotHighmarks என்று சுட்டி கழுகு தெரிவித்துள்ளார்.

குமாரசாமி

பொண்ணுக பேப்பர திருத்தரது எல்லாம் குமாரசாமி மாதிரி ஆளுக; பசங்க பேப்பர திருத்தரது எல்லாம் குண்ஹா மாதிரி ஆளுக. #WhyGirlsGotHighmarks என வாழு, வாழவிடு என்பவர் தெரிவித்துள்ளார்.

English summary
SSLC results have been declared in TN on thurday. On this day, #WhyGirlsGotHighmarks is trending on twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X