நடத்தையில் சந்தேகம்- கணவனை அடித்துக் கொன்று நாடகமாடிய மனைவி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கணவனைக் கொன்றுவிட்டு, அவர் மதுவால் இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே மாதவன்நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரைவேல் கூலித்தொழிலாளி.
இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு திருமணமாகிய 2 மகள்கள் உள்ளனர்.
நடத்தையில் சந்தேகம்:
வெள்ளையம்மாள் நடத்தையில் சித்திரைவேல் அடிக்கடி சந்தேகம் அடைந்து தகராறு செய்துவந்துள்ளார்.இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவனை அடித்து, துவைத்த மனைவி:
இதில் சித்திரைவேல், வெள்ளையம்மாளை அடித்து துன்புறுத்தி உள்ளார். ஆத்திரமடைந்த வெள்ளையம்மாள் பதிலுக்கு வீட்டிற்கு வெளியே கிடந்த விறகு கட்டையை எடுத்து வந்து சித்திரைவேலை சரமாரியாக அடித்துள்ளார்.
படுகாயமடைந்த சித்திரவேல்:
இதில் படுகாயம் அடைந்த சித்திரைவேல் சரிந்து விழுந்தார்.உடனே வீட்டைப் பூட்டிவிட்டு வெள்ளையம்மாள் அருகில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்று தங்கினார். நேற்று காலை வீட்டைத் திறந்து பார்த்தபோது சித்திரைவேல் இறந்து கிடந்தது தெரியவந்தது.
மதுவால் இறந்ததாக நாடகம்:
அதிர்ச்சியடைந்த வெள்ளையம்மாள் சுதாரித்துக்கொண்டு, ரத்தத்தை துடைத்து, தடயங்களை எல்லாம் அழித்தார். பின்னர் உறவினர்களிடம் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் கீழே விழுந்து சித்திரைவேல் இறந்ததாக தெரிவித்தார்.
இறுதிச்சடங்கு பணிகள்:
அதைத்தொடர்ந்து அவரது உடலை சம்பிரதாயப்படி இறுதிச்சடங்குகள் செய்யும் பணிகளையும் அவர் விரைவாக செய்துள்ளார். அவரது செயல்களில் சந்தேகமடைந்த உறவினர்களில் சிலர் சிப்காட் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்தனர்.
போலீசார் கைது:
போலீசார் விசாரணையில், வெள்ளையம்மாள், சித்திரைவேலை விறகு கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications