அக்டோபர் 17ல் அதிமுக பிறந்தநாள் விழா அறிவித்த டிடிவி தினகரன் - கட்சி அலுவலகம் வருவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவிற்கு பரோல் நீட்டிப்பு கேட்கவில்லை என்று கூறியுள்ள தினகரன், அதிமுகவின் தொடக்க விழா, வரும் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கடந்த 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கினார். அதிமுக தொடங்கப்பட்ட நாளை பிரம்மாண்ட விழாவாக அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

கட்சி அலுவலகத்திற்கு ஜெயலலிதா வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விழா மலரை வெளியிடுவார்.

கடந்த ஆண்டு ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும், அவரது ஒப்புதலோடு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் விழா நடைபெற்றது.

ஒருங்கிணைந்த அணிகள்

ஒருங்கிணைந்த அணிகள்

ஓபிஎஸ், சசிகலா என அதிமுக பிளவுபட்டது. ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதிகள் அணிகள் இணைந்தன. இதனையடுத்து
சசிகலா, தினகரன் நீக்கப்பட்டனர். தற்போது தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழ்நிலையில் வரும் 17ஆம் தேதி அதிமுகவின் 46ஆவது தொடக்க நாள் நிகழ்வு வரவுள்ளது.

அதிமுக பிறந்தநாள் கொண்டாட்டம்

அதிமுக பிறந்தநாள் கொண்டாட்டம்

அதிமுக தொடக்க நாள் விழாவிற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தயாராகும் முன்பே டிடிவி தினகரன் கொண்டாட்டம் பற்றி அறிவித்து விட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் , அதிமுகவின் 46ஆவது ஆண்டு தொடக்க விழா அக்டோபர் 17 முதல் 26 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். ஆனால் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை

அரசுக்கு கவலையில்லை

அரசுக்கு கவலையில்லை

ஒவ்வொரு நாளும் ஆட்சியைக் கைப்பற்றுவதிலே இந்த அரசு அக்கறை செலுத்துகிறது. டெங்கு, கீழடி அகழாய்வு உள்ளிட்டவை குறித்து அரசு கவலைப்படவில்லை.

சசிகலா பரோல் நீட்டிப்பு கேட்கவில்ல

சசிகலா பரோல் நீட்டிப்பு கேட்கவில்ல

சசிகலாவுக்கு பரோல் நீட்டிப்புக் கோரவில்லை என்று தெரிவித்த தினகரன் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது மனசாட்சியின்படிதான் சில கருத்துகளைக் கூறியிருந்தார். அவருக்குப் பிறர் அழுத்தம் கொடுத்ததாகத் தெரியவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As announced earlier, will Dinakaran visit the ADMK head quarters soon?

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற