நீதிமன்றம் கடும் எச்சரிக்கை: அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்குப் பாதகமான புதிய பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் வரையற்றுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது, நீட் தேர்வை ரத்துசெய்வது ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 Will government staffs withdrawn their indefinite strike

இப்போராட்டம் வியாழக்கிழமை 4-வது நாளாக நீடித்தது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போராட்டகளத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு இரவும் அங்கேயே உறங்குகிறார்கள். இந்த போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.

எனினும் தடையை மீறி போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆசிரியர்களுக்கு எப்படி போராட உரிமையுள்ளது.

அரசுக்கும் ஊழியர்களுக்கும் இடையேயான போராட்டத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஏன் நினைக்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை அரசு ஊழியர்கள் ஏன் கேலிக்கூத்தாக மாற்றினீர்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து போராட்டத்தை கைவிட காலஅவகாசம் அளித்து விசாரணை இன்றைக்கே மீண்டும் எடுக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இன்றைய விசாரணையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் போராட்டத்தைக் கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட தயங்கினார். இதில் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், போராடுவோரை ஒரு மணிநேரத்தில் பணி நீக்கம் செய்ய முடியும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து அனைவரும் வெளியேறாவிட்டால் அப்புறப்படுத்தப்படுவர் என கடுமையாக எச்சரித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Government staffs withdrawn their indefinite strike after Madras Highcourt's Madurai bench ordered them to wtihdraw the strike within an hour.
Please Wait while comments are loading...