சசிகலா கடிதம் எழுத... ஓபிஎஸ் உறுதியளிக்க... சீறிப் பாயுமா காளைகள்.. எதிர்பார்ப்பில் மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடக்குமா? என்று ஏக்கத்தில் உள்ளனர் மாடுபிடி வீரர்கள்.

தமிழர்களின் வீர விளையாட்டு, பாரம்பரியம் ஜல்லிக்கட்டு. ஆதி தமிழ்க் கூட்டம் நடத்தி வந்த இந்த வீர விளையாட்டு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் உச்சநீதிமன்ற தடையால் கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.

கடந்த பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று கடைசிவரை எதிர்பார்த்து பின்னர் ஏமாந்ததுதான் மிச்சம். இந்த ஆண்டும் மத்திய அரசு கை விரித்து விட்டது.

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்தியே ஆகவேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், காளைகளை காட்சிப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சசிகலா கடிதம்

சசிகலா கடிதம்

ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை காக்கம் வகையில் அவசரச் சட்டம் இயற்றவும் கடிதத்தில் சசிகலா வலியுறுத்தியுள்ளார். இந்த வார இறுதியில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடைபெற உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுத்து அவசரச்சட்டம் இயற்ற சசிகலா கோரியுள்ளார்.

ஒபிஎஸ் உறுதி

ஒபிஎஸ் உறுதி

இந்த கடிதத்தை அதிமுக எம்.பிக்கள் மத்திய அமைச்சரிடமும், பிரதமர் அலுவலகத்திலும் அளித்துள்ளனர். இதனிடையே ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வாடிவாசல் தாண்டுமா?

வாடிவாசல் தாண்டுமா?

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு காக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது என்றும் முதன் முறையாக தைரியமாக வாய் திறந்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் சசிகலாவின் கடிதம், ஓபிஎஸ் அளித்துள்ள உறுதி காளைகளை வாடி வாசல் தாண்ட வைக்குமா? பார்க்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People in Tamil Nadu hope for the best in Jallikkattu issue this year.
Please Wait while comments are loading...