ரஜினியின் ஆன்மீக அரசியல்.. திராவிட அரசியலை முறியடிக்குமா? #Rajinikanthpoliticalentry

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என்ற தோணியில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பதே இப்போதைய முக்கிய விவாதப்பொருள். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் திராவிட பாரம்பரியத்தில் வந்தவை. கடவுள் எதிர்ப்பு கொள்கை கொண்ட தலைவர்களிடம் இருந்து தொடங்கிய கட்சிகள் என்றாலும், கடவுள் மறுப்பு என்பதை மட்டுமே மையமாகக்கொண்டு இக்கட்சிகள் செயல்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

திமுகவை விட அதிமுக இந்துத்துவா வாடை அதிகம் கொண்ட கட்சி என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு அதிமுக தலைமையின் தீவிர கடவுள் நம்பிக்கை காரணம்.

தனி அரசியல் பாதை

தனி அரசியல் பாதை

ஆன்மீக அரசியல் என்ற புதிய கான்செப்ட்டை ரஜினி முன்னெடுத்துள்ளார். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட ரஜினிக்கு திராவிடக்கட்சிகளை நேரடியாக எதிர்த்து அரசியல் செய்யமுடியுமா? என்ற கேள்வி முக்கியமானது. பல முயற்சிகளை மேற்கொண்டாலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் இன்னும் கால்பதிக்க முடியவில்லை.

ஆன்மீக அரசியல் சாயம்

ஆன்மீக அரசியல் சாயம்

இந்த சூழலில் ரஜினி கட்சி தொடங்கும் முன்பே ஆன்மீக சாயம் பூசிக்கொண்டுள்ளார். இந்த ஆன்மீக சாயம் தமிழகத்தில் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆன்மீக அரசியல் என்றால் தர்மமான, நியாயமான அரசியல் என்று ரஜினி புது விளக்கம் அளித்துள்ளர்.

திராவிட கட்சிகளை நேரடியாக சாடவில்லை

திராவிட கட்சிகளை நேரடியாக சாடவில்லை

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, ஊழல் புரையோடி இருக்கு என்று ரஜினிகாந்த் கடுமையாக பேசியுள்ளார். அதற்கு திராவிடக்கட்சிகள் தான் காரணம் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தார் என்றால், எழும் எதிர்ப்பை அவர் சந்திருப்பார். கட்சித்தலைவர்கள் விமர்சனம் இன்னும் அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கும்.

தமிழக அரசியலை புரட்டிப் போடுவாரா?

தமிழக அரசியலை புரட்டிப் போடுவாரா?

மாஸ் ரசிகர்களைக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் தனியாக கட்சி ஆரம்பிக்கும்போது திராவிடக்கொள்கையை ஒட்டி ஆரம்பித்தார். அதேபோல் விஜயகாந்த் தனிக்கட்சி தொடங்கும்போதும் திராவிடம் என்ற வார்த்தை கட்சியின் பெயரில் இருக்க வேண்டும் என்று கவனமாக பெயர் சூட்டினார். இந்த நிலையில் திராவிட அரசியல் பாதையை மாற்றி, ஆன்மீக அரசியல் என்ற புதிய பாதையில் ரஜினி பயணிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அவரின் வியூகங்கள் கைகொடுக்குமா என்பது எதிர்கால நகர்வுகளை வைத்தே தீர்மானிக்க முடியும் நிலை உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Will Rajinikanth's devotional politics beat Tamilnadu dravidian politics, he announced his political journey with the name of Aanmeega Arasiyal.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற