For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக அணிகள் இணைப்புக்கு டிடிவி தினகரனை பலியாக்க போகிறதா பாஜக?

டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகியுள்ள அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரிகளின் கேள்விகளுக்கு குழப்பும் வகையில் பதில் அளிப்பதால் அவர் சென்னை திரும்புவதில் சங்தேகம் ஏற்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க எந்த தேர்தல் அதிகாரியிடம் அணுக திட்டமிடப்பட்டிருந்தது என்று போலீசார் தினகரனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிகாரிகளுக்கு 60 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த தகவலின் அடிப்படையில் டெல்லி போலீஸார் சென்னைக்கே வந்து தினகரனுக்கு சம்மன் கொடுத்து சென்றனர்.

தினகரனும் நேற்று ஆஜரானார் அவரிடம் அப்போது 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்றும் பிற்பகல் 2.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். தினகரனோடு அவருடைய உதவியாளர் ஜனார்தனன்,நண்பர் ஒருவரும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

 ஆதாரங்கள் காட்டி கேள்வி

ஆதாரங்கள் காட்டி கேள்வி

நேற்று நண்பகலில் தினகரனிடம் கேட்கப்பட்ட தகவல்களுக்கு தெரியாது என்றே பதில் வந்துள்ளது. அதனால் தினகரனை வேறு அறையில் அமர சொல்லிவிட்டு, அவருடைய உதவியாளிரிம் விசாரணையை நடத்தியுள்ளனர். துவக்கத்தில் சில பேப்பர்களை காட்டிய விசாரணையைத் தொடங்க, அது எந்த பதிலையும் சொல்லாமல் முரண்டுபிடித்துள்ளார் ஜனார்த்தனன். எனவே அடுத்ததாக ஜனா - சுகேஷ் இடையே நடைபெற்ற செல்போன் உரையாடலை போட்டு காட்டியுள்ளனர் போலீசார்.

 எஸ்கேப் ஆன தினகரன்

எஸ்கேப் ஆன தினகரன்

இதனையடுத்து ஜனார்த்தன் ஒப்புக்கொண்ட தகவல்களை வைத்தே தினகரனிடம் விசாரணை நடைபெற்றதாகத் தெரிகிறது. ஆனால், ஜனார்த்தனன் சொன்ன தகவல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றே மறுத்து வந்துள்ளார் தினகரன். தொடர்ந்து அதிகாரிகள் கிடுக்குபிடி கேள்விகளால் உடல்நிலை சரியில்லை என்று கூறினாராம் தினகரன்.

இதனையடுத்து இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

 தப்ப வழியில்லை

தப்ப வழியில்லை

எந்த தேர்தல் அதிகாரியை வைத்து லஞ்சம் தர முயற்சிக்கப்பட்டது என்று காவல்துறையினர் தினகரனை துருவித் துருவி வினவி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதாரங்களின் அடிப்படையிலேயே விசாரணை நடைபெற்று வருவதாகவும் இன்றும் விசாரணை முடியாவிட்டால் நாளை விசாரணையோ,கைது நடவடிக்கையோ இருக்கும் என்று தெரிகிறது.

 சென்னை திரும்புவாரா?

சென்னை திரும்புவாரா?

அதிமுகவின் ஓ.பிஎஸ் மற்றும் இ.பி.எஸ் அணி நானை கட்சி இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் தினகரன் சென்னையில் இருப்பதை விரும்பா த பாஜக ஆடும் ஆடு புலி ஆட்டம் இது என்றும் கூறப்படுகிறது. எனவே விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள தினகரன் சென்னை திரும்புவதில் சிக்கல் நிலவுகிறது.

English summary
TTV Dinakaran said no to all the questions raised by the delhi police regading EC bribe case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X