பேனரில் போட்டோ போடாமல் வேட்பாளர்களை எப்படி அறிமுகப்படுத்துவது.. சீமான் பொளேர்!
உயிரோடு இடம் பெறுபவர்களின் படம் பேனர்களில் இடம் பெறக்கூடாது என்றால் வேட்பாளர்களை எப்படி அறிமுகம் செய்வது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: உயிரோடு இடம் பெறுபவர்களின் படம் பேனர்களில் இடம் பெறக்கூடாது என்றால் வேட்பாளர்களை எப்படி அறிமுகம் செய்வது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிருடன் உள்ளவர்களுக்கு பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் வைக்க தடை விதித்து கடந்த செவ்வாய்க் கிழமை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளில் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது எனவும், உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரமான சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை எதிர்த்து தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் தனி நீதிபதி விதித்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்தது.

சீமான் எதிர்ப்பு
இதனிடையே நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று கூறினார்.

தனி இடம் ஒதுக்க வேண்டும்
சுவரில் எழுதும் கலாச்சாரத்திற்கு தடை விதிக்கவேண்டும். போராட்டம் மற்றும் கூட்டங்கள் நடத்த தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

எப்படி வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவது?
மற்ற அரசியல்வாதிகள் டிவி சேனல்கள் வைத்திருப்பதாக கூறிய சீமான், அவர்கள் தங்களின் டிவி சேனல் மூலம் பேசிக்கொள்வார்கள் என்றும் எங்களைப் போன்றவர்கள் எப்படி பேசுவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். நாங்கள் எப்படி வேட்பாளர்களை அறிமுகம் செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர்களுக்குதான் வாய்ப்பிருக்கும்
பேனர் இல்லாமல் வேட்பாளரை அறிமுகப்படுத்துவதற்குள் தேர்தல் முடிந்துவிடும் என்றும் சீமான் கூறினார். உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற மக்களுக்கு தெரிந்த நடிகர்களுக்குதான் வாய்ப்பிருக்கும், மக்களுக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பிருக்காது என்றும் சீமான் தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications