டாஸ்மாக் கடையை துவம்சம் செய்த பெண்கள்... மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கும் முயற்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடைகள் அப்பகுதி பெண்கள் அடித்து நொறுக்கினர்.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்கு உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அக்கடைகள் மூடப்பட்டன.

இதனால் அதிகாரிகள் ஊருக்குள் கடைகளை வைக்க இடம்தேடி வருகின்றனர். அந்த வகையில் ஊருக்கு் வைக்கும் கடைகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியில்

கும்மிடிப்பூண்டியில்

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக கடை அருகே பெண்கள் ஒன்றுகூடினர். அங்கிருந்த மதுபானங்கள் அடித்து நொறுங்கினர். மதுபான சரக்குகளுடன் வந்த லாரியையும் விரட்டி அடித்தனர். மேலும் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்கள் தற்கொலை முயற்சி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கேளம்பாக்கம்- பெரும்பாக்கம்

கேளம்பாக்கம்- பெரும்பாக்கம்

மேலும் சென்னை கேளம்பாக்கம், பெரும்பாக்கம் இடையே திறக்கப்பட்ட கடைகளுக்கும் கடும் எதிர்ப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் சம்பவ இடத்துக்கு வந்து டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று உறுதி அளித்ததன் பேரில் மக்கள் கலைந்தனர்.

பெரம்பலூரில்

பெரம்பலூரில்

அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது டாஸ்மாக கடைகளை எங்கும் அமைத்தாலும் பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவிப்பதால் டாஸ்மாக் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

திருப்பூர் அடிக்கு பதிலடியா

திருப்பூர் அடிக்கு பதிலடியா

திருப்பூரில் மதுக் கடைக்கு எதிராக போராடிய பெண்களை ஈவு இரக்கமின்றி அடித்து விரட்டியது போலீஸ். அதற்குப் பதிலடியாக தற்போது பெண்கள் படை திரண்டு கடைகளை அடித்து நொறுக்கி பதிலடி கொடுப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Women protest against for TASMAC shops in throught out TamlNadu. Thiruvallur District women break all the bottles in the shop.
Please Wait while comments are loading...