மேடம் ப்ளீஸ் கதவைத் திறங்க..குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேர் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் குரூப்-2 தேர்வு எழுத குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாமல் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தும் தேர்வு எழுத முடியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் மாநிலம் முழுவதும் குரூப்-2 போட்டித் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 23 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்காக பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான தேர்வர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

TNPSC Group 2 Ranipet 2

தாமதமாக வந்த தேர்வர்கள்

இந்நிலையில், ராணிப்பேட்டை பகுதியிலுள்ள எல்.எப்.சி. நிதியுதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் குரூப்-2 போட்டி தேர்வு நடந்தது. இத்தேர்வு மையத்திற்கு காலை முதலே தேர்வர்கள் வருகை தந்தனர் காலை 9 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்வு எழுதுவதற்காக வந்த 4 தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்துள்ளனர்.

மேடம் ப்ளீஸ்..

அவர்களை தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி கோரி நீண்ட நேரமாக வெளியே காத்திருந்தும் உள்ளே அனுமதிக்காததால் பெரும் ஏமாற்றமும், வேதனையும் அடைந்தனர். குறிப்பாக, பல்வேறு சிரமங்களுக்கு இடையே போட்டி தேர்வுக்காக தயாராகி, தேர்வு எழுத வேண்டும் என்ற கனவுடன் வந்த குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேரும் தேர்வு மையத்தின் வெளியே நின்று மேடம் ப்ளீஸ் கதவை திறங்கள் திறங்கள் என தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், நீண்ட நாட்களாக தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதால் 4 பேரும் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டனர். அதேபோல, அரசு பணியில் சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வந்த தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் வெளியே காத்திருந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+