மெட்ரோ சுரங்கப் பாதை பணியில் விபத்து.. இரும்பு கம்பி விழுந்து தொழிலாளி பரிதாப பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மீது இரும்புக் கம்பி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மற்றும், விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வரையிலும் உயர்த்தப்பட்ட பாதையில் சென்று வருகிறது.

Worker dead in metro rail work near Rippon Builing

அதே போன்று திருமங்கலம் ரயில் நியைலத்தில் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியில் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை உள்ள பகுதியிலும் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தப் பணிகளின் போது, இரும்பு கம்பி ஒன்று திடீரென மேலிருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இரும்புக் கம்பி அங்கு பணி செய்து கொண்டிருந்த பிகாரைச் சேர்ந்த தொழிலாளி அம்ரேந்தர் ராம் என்ற தொழிலாளி மீது விழுந்தது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளி பலியாகியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Worker dead in metro rail work near Rippon Builing, tension prevails.
Please Wait while comments are loading...