அன்று tmb 9000 கோடி.. இன்று கோட்டக் ரூ.756 கோடி எஸ்எம்ஸ்.. தஞ்சை வாடிக்கையாளர் பரபரப்பு பேட்டி
சென்னை: அண்மையில் ஒரு டிரைவரின் கணக்கில் 9000 கோடியை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தவறுலாக போட்டது. அதை பின்னர் திரும்ப பெற்றுக்கொண்டது . அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்தவருக்கு 756 கோடி ரூபாயை கோட்டக் மஹிந்திரா வங்கி போட்டதாக எஸ்எம்எஸ் வந்திருந்தது. இதுபற்றி வாடிக்கையாளர் பேட்டி அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்த 29 வயதாகும் கணேசன் என்பவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கோட்டக் மஹிந்திரா வங்கி கணக்கில் இருந்து ரூ.1,000 ஐ கணேசன் தனது நண்பர் ஒருவருக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார். பணம் டிரான்ஸ்பர் ஆன பின்னர் அவர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி ரூபாய் மீதம் இருப்பதாக அவருக்கு எஸ்எம்எஸ் வந்திருக்கிறது.

என்னடா இது இவ்வளவு தொகை காட்டுதே என்று மினி ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்திருக்கிறார்..ஆனால் காட்டவில்லை. நேராக வங்கிக்கு சென்று மேலாளரை சந்தித்து, நடந்த விவரத்தை கூறி புகார் அளித்துள்ளார் கணேசன். ஆனால் வங்கி மேலாளர் எந்த விளக்கமும் கூறாமல், கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துவிட்டாராம்.
இதுபற்றி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கணேசன், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவன். நான் நேற்று இரவு கோட்டக் மகேந்திரா வங்கி கணக்கு மூலம் நண்பனுக்கு 1000 ரூபாய் பணம் அனுப்பினேன். அந்த பணம் போய்விட்டது என்று மெஜேஜ் வந்தது. திரும்ப கோட்டக் மஹிந்திரா வங்கியில் இருந்து பணம் கிரிடிட் ஆனதாக மெசேஜ் வந்தது. அந்த மெசேஜை ஓபன் செய்து பார்த்தால் புதிய பேலன்ஸ் என்று ஒரு தொகை காட்டியது. அதில் பார்த்தால் 756 கோடி ரூபாய் இருப்பதாக காட்டியது.
என்னடா இது இவ்வளவு கோடி காட்டுது என்று காலையில் வங்கியில் போய் பார்த்து கேட்டேன்.. சேசியரை பார்த்து கேட்ட போது, அவர் என்னுடைய அக்கவுண்ட் நம்பரை செக் செய்துவிட்டு என்னவென்று தெரியவில்லை. மேனேஜரை போய் பாருங்கள் என்றார். மேனஜேரை போய் பார்த்தேன்.. மேனேஜரும் என்ன வென்று தெரியவில்லை. ஸ்கீரின் ஷாட் மட்டும் அனுப்புங்க என்று அனுப்ப சொல்லிவிட்டு என் நம்பரை வாங்கிவிட்டு , நீங்க போங்க நான் பார்த்துட்டு கால் பண்றோம் என்றார்.
ஆனால் இதுவரை வங்கியில் இருந்த எந்த அழைப்பும் வரவில்லை.. இவ்வளவு பெரிய தொகை காட்டியதால் எதுவும் வரி கட்டா சொல்வார்களோ என்ற பயம் வந்துவிட்டது. நான் மினி ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்தேன், அதில் எதுவும் காட்டவில்லை.. வங்கி கணக்கிலும் இல்லை. எஸ்எம்எஸ் மட்டுமே வந்தது என்றார்.
அண்மையில் சென்னையில் வசித்து வந்த டிரைவரின் கணக்கில் 9000 கோடியை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தவறுலாக போட்டது. அதை பின்னர் திரும்ப பெற்றுக்கொண்டது . அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்தவருக்கு 756 கோடி ரூபாயை கோடாக் வங்கி போட்டதாக எஸ்எம்எஸ் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வங்கி தரப்பில் விளக்கம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெறும் எஸ்எம்எஸ் மட்டுமே தனக்கு வந்துள்ளது என்றும், வங்கி கணக்கில் அப்படி பணம் வந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும் வாடிக்கையாளரே கூறியுள்ளார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications