தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இட ஒதுக்கீடு மூலம் கல்வி அறிவை பெற்றவர் அண்ணாமலை.. கலைஞரை பற்றி பேச வேண்டாம் -செஞ்சி மஸ்தான் அறிவுரை

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: இட ஒதுக்கீடு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை கலைஞர் போன்றவர்களை விமர்சனம் செய்யாமல், கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையாக பேச வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் அண்ணாமலைக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

‛நாடகம்’ என்ற அண்ணாமலை.. ‛உள்நோக்கம்’ என ஒரேபோடு போட்ட கேஎஸ் அழகிரி.. பரபர பாரத் ஜோடோ யாத்திரை ‛நாடகம்’ என்ற அண்ணாமலை.. ‛உள்நோக்கம்’ என ஒரேபோடு போட்ட கேஎஸ் அழகிரி.. பரபர பாரத் ஜோடோ யாத்திரை

 நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

நிகழ்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செஞ்சி. மஸ்தான், 162 கிறிஸ்துவ, இஸ்லாமிய பயணாளிகளுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பில் தையல் எந்திரம், விலையில்லா கிரைண்டர் மற்றும் மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 சட்டரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

சட்டரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி நீண்ட காலம் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க சட்டரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இதன் மூலம் இந்த வழக்கில் விரைவில் தீர்வு காண முடியும். இந்தியாவிலேயே சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பும், அமைதியான சூழலும் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 அண்ணாமலைக்கு அறிவுறை

அண்ணாமலைக்கு அறிவுறை

தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய அமைச்சர் செஞ்சி. மஸ்தான், ''இட ஒதுக்கீட்டு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை கலைஞர் போன்றவர்களை விமர்சனம் செய்யாமல், கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையாக பேச வேண்டும்'' என்று கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''அண்ணாமலை கல்வி அறிவை பெற்றது அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால் தான்.

 மேன்மையாக பேச வேண்டும்

மேன்மையாக பேச வேண்டும்

இவ்வாறு அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை, அவர்களை விமர்சனம் செய்யாமல் கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்'' என்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

English summary
Minority Affairs Minister Senchi said that instead of criticizing people like Annamalai artist who got education through reservation, they should study the history of the past and speak highly. Mastan has advised Annamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X