தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரை விட்டு ஒதுக்குறோம்.. ஒரத்தநாட்டில் தீண்டாமை! தலித்துகளுக்கு பொருள் விற்க மறுப்பு -பகீர் வீடியோ

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: சங்கரன்கோயில் அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததற்காக தலித் சிறுவர்களுக்கு கடையில் திண்பண்டம் வழங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே போன்ற சம்பவம் ஒரத்தநாடு அருகே அரங்கேறி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் தென்காசி மாவட்டம் சங்கரன் கோயிலை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் தலித் மக்களை கிராம பஞ்சாயத்து என்ற பெயரில் ஆதிக்க சாதியினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்குள்ள ஒரு பெட்டிகடையில் திண்டபண்டம் வாங்க சென்ற ஆறு தலித் சிறுவர்களின் கடையின் உரிமையாளர் உங்களுக்கு தின்பண்டங்கள் கிடையாது. உங்களுக்கு பொருட்கள் கொடுக்கக்கூடாது ஊர் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது என்று கூறியதை யாராலும் மறந்திருக்க முடியாது.

தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த.. சீன, ரஷ்ய விமானங்கள்.. பதறிய அமெரிக்கா.. என்ன நடந்தது? தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த.. சீன, ரஷ்ய விமானங்கள்.. பதறிய அமெரிக்கா.. என்ன நடந்தது?

சங்கரன்கோயில் சம்பவம்

சங்கரன்கோயில் சம்பவம்

சாதி குறித்து எதுவும் அறியாத அப்பாவி குழந்தைகள் கட்டுப்பாடா? அப்படி என்றால் என்ன? என்று கேட்க உங்களுக்கு எந்த பொருட்களும் கொடுக்கக்கூடாது என்றும் உங்களை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என கடைக்காரர் கூறியதை கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் நடவடிக்கை

அதிகாரிகள் நடவடிக்கை

இதனை தொடர்ந்து ஊரை விட்டு ஒதுக்கிய கிராம தலைவர், கடைக்காரர் உள்ளிடோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பிறகாவது சாதி வெறியர்கள் திருந்துவார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை. மீண்டும் அதேபோன்ற சம்பவம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரங்கேறி இருக்கிறது.

கிளாமங்கலம் தெற்கு கிராமம்

கிளாமங்கலம் தெற்கு கிராமம்

இங்குள்ள கிளாமங்கலம் தெற்கு என்ற கிராமத்தில் தலித் மக்கள் பல்வேறு சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். இதனை எதிர்த்து பேசியதற்காக அவர்களை ஆதிக்க சாதியினர் ஊரை விட்டே ஒதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மே 17 இயக்கம் சங்கரன்கோயில் சம்பவத்தை போன்றே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

கடையில் பொருள் வழங்க மறுப்பு

கடையில் பொருள் வழங்க மறுப்பு

அதில், கடையில் பொருள் வாங்க சென்ற நபரிடம் கடைக்காரர், "இல்ல தம்பி, கிராமத்துல கொடுக்கக்கூடாது என்று சொல்லி இருக்காங்க!" என்று கூறினார். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பகிர்ந்து உள்ளார்.

திருமுருகன் காந்தி

அத்துடன் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "ஒரத்தநாடு கிளாமங்களம் (தெ) கிராமத்தில் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பின் பட்டியலின மக்களுக்கு கடைகளில் தடைவிதித்த ஆதாரங்கள் உரிய அதிகாரிகளிடத்தில் மே17 கொடுத்துள்ளது. அப்பட்டமான சாதிய காட்டுமிராண்டித்தனத்தினை மேற்கொண்டவர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனே கைது செய்யப்பட வேண்டும்.

சாதி நியாயமில்லை

சாதி நியாயமில்லை

இக்கொடுமையை செய்பவர்களை மே17 இயக்கம் துணிந்து எதிர்த்து நிற்கும். ஆழ வேரோடி நிற்கும் சாதிய இழிவை துடைத்து தமிழ்த்தேசியம் படைப்போம். சாதியை குடி என்று திரிப்பதால் சாதி நியாயமாகாது. இக்குற்றம் செய்தவர்களை கைது செய்யும்வரையில் மே 17 இயக்கம் தொடர்ந்து போராடும். கைகோர்ப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

முதலமைச்சர் விசிக எம்பி கடிதம்

முதலமைச்சர் விசிக எம்பி கடிதம்

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமாறும் கிளாமங்கலம் தெற்கு பகுதியில் நடக்கும் தீண்டாமை குற்றங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மாநில பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் திருமுருகன் காந்தி வெளியிட்ட இந்த வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A similar incident is taking place near Oratha Nadu, where the shop refused to provide snacks to Dalit children for leaving the village near Sankarankoil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X