கும்பகோணமே மாறுது.. இனி நீங்க நினைத்த மாதிரி சாலையில் செல்ல முடியாது! புதிய விதிகள் வெளியீடு
தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியில் 4 ஆம் தேதி முதல் போக்குவரத்து வழித்தடங்களை மாற்றி ஒருவழிப்பாதை, பேருந்து வழித்தடம் தொடர்பான முழு விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஒருவழிப்பாதை:
1) நால்ரோடு சந்திப்பு முதல் பழைய மீன் மார்க்கெட் வரை
02) பாலக்கரை காமராஜர் சிலை முதல் காந்தி பார்க் வரை
03) மேலக்காவேரி சந்திப்பு முதல் பாலக்கரை சந்திப்பு வரை
04) காந்திபார்க் முதல் தஞ்சை மெயின் ரோடு வரை
05) பெரியகடைவீதி, T.S.R பெரியகடைவீதி, காந்திபார்க் வரை
06) T.S.R பெரியகடைத் தெரு முதல் காந்திபார்க் வரை
07) Dr.பெசன்ட் ரோடு சந்திப்பு கோதண்டபாணி தெரு முதல் தஞ்சாவூர் மெயின் ரோடு வரை
08) ராமசாமி கோவில் முதல் முராரி சந்திப்பு வரை
09) சாந்தி காபி சந்திப்பு (காளியம்மன் கோவில் தெரு ) உழவர் சந்தை வரை
10) தி.கிரைஸ்ட் தி கிங் பள்ளி சந்திப்பு முதல் (அனுமார் குளம் ரோடு) காமராஜர் ரோடு சந்திப்பு .

பேருந்து வழித்தட மாற்றம்:
01) அசூர் பைபாஸ் முதல் பாலக்கரை வரை நகர பேருந்துகள் தவிர இதர அனைத்து பேருந்துகளும் வழித்தட மாற்றம்
02) தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வரும் அனைத்து பேருந்துகளும் பழைய ராமன் & ராமன்.தலைமை தபால் |நிலையம் காமராஜர் ரோடு வழியாக பேருந்து நிலையம் செல்ல அனுமதி இல்லை
03) அனைத்து மினி பேருந்துகளும் பழைய ராமன் & ராமன் வழியாகவோ தலைமை தபால் நிலையம் காமராஜர் ரோடு வழியாக, ஆஞ்சநேயர் கோவில் நிலையம் வழியாகவோ செல்ல அனுமதி இல்லை.
முழு விபரம்: நால்ரோடு சந்திப்பில் இருந்து மீன் மார்கெட் வழியாக தஞ்சாவூர் மெயின் ரோட்டில் கனரக வாகனங்கள் அரசு மற்றும் தனியார்பேருந்துகள் கும்பகோணம் நகருக்குள் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
பாலக்கரை காமராஜர் மார்க்கெட்டில் இருந்தும் காமாட்சி ஜோசியர் தெருவிலிருந்தும் இருசக்கர வாகனம் மற்றும் பள்ளிக்கு செல்லும் ஆட்டோ தவிர மற்ற எந்த வாகனமும் மடத்து தெரு வழியாக காந்தி பார்க் வரை செல்ல அனுமதி கிடையாது. இதற்கு பதிலாக காமராஜர் மார்க்கெட்டில் இருந்து (கோர்ட் ரோடு) காசி ராமன் தெரு வழியாகவோ அல்லது பக்தபுரி ரோடு வழியாகவோ டாக்டர் பெசன்ட் ரோடு வந்து நகருக்குள் செல்லவேண்டும். காசி ராமன் தெருவில் இருந்து டபீர் நடுத்தெரு வழியாகவோ அல்லது மூங்கில் கொல்லை தெரு வழியாகவோ பச்சையப்பன் முதலியார் தெரு வழியாகவோ மடத்து தெருவுக்கு செல்ல கூடாது.
03. மேலக்காவேரி சந்திப்பில் இருந்து பெருமாண்டி ரோடு வழியாக பாலக்கரைக்கு இரு சக்கர வாகனங்கள் பள்ளிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் தவிர வேறு எந்த மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பாலக்கரை வழியே நகருக்குள் செல்ல அனுமதி இல்லை இந்த பாதைக்கு மாற்றாக மேலக்காவேரி சந்திப்பில் இருந்து காமாட்சி ஜோசியர் ரோடு வழியாக மடத்து தெரு வந்து இடது புறம் திரும்பி காமராஜர் மார்க்கெட் ரோடு வழியே செல்ல வேண்டும்.
04. காந்தி பார்க் சந்திப்பில் இருந்து எந்த வாகனமும் டைமண்ட் சந்திப்பு நோக்கி தஞ்சாவூர் மெயின்ரோடு செல்ல அனுமதி இல்லை. இதற்கு பதிலாக அனைத்து வாகனங்களும் TSR பெரிய தெரு வழியாக வந்து உச்சிபிள்ளையார் கோவில் ரோடு வழியாகவும் அல்லது டாக்டர் பெசென்ட் ரோடு வழியாக சென்று செல்வம் சந்திப்பு வந்து நகருக்குள் செல்ல வேண்டும்.
05. கும்பகோணம் பெரியகடை வீதியில் இருந்து செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் டாட்டா ஏசி லாரி உள்பட TSR பெரிய தெரு வழியாக வெளியே செல்லகூடாது. பெரிய கடை வீதியில் இருந்து சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மூர்த்தி செட்டி தெரு சந்திப்பு வரை வந்து குஞ்சிதபாதம் ரோடு வழியாக வெளியே வந்து காந்தி பார்க் ரோடு வழியாகவோ அல்லது மடத்து தெரு வழியாகவோ வெளியே செல்ல வேண்டும்.
06. T.S.R பெரிய தெரு சந்திப்பில் இருந்து (CUB) காந்திபார்க் சந்திப்பிற்கு நேரிடையாக இரு சக்கர வாகனங்கள் தவிர வேறு எந்த மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் செல்ல அனுமதி கிடையாது அனைத்துவாகனங்களும் இந்த T.S.R பெரிய தெரு (CUB) சந்திப்பில் இருந்து சாரங்கபாணி சன்னதி தெரு வழியாக காவேரி மெடிக்கல் சந்திப்பு வந்து காந்திபார்க் செல்ல வேண்டும் T.S.R பெரிய தெரு சந்திப்பில் இருந்து காந்தி பார்க் செல்லும் பாதையானது ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது
07. டாக்டர் பெசண்ட் ரோட்டிலிருந்து இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கோதண்டபாணி தெரு வழியாக ( ஆனந்தம் சில்க்ஸ் சந்து ) தஞ்சாவூர் மெயின் ரோடு செல்ல அனுமதி இல்லை.
08. ராமசாமி கோவில் சன்னதி தெருவில் இருந்து முராரி சந்திப்பு வரை இரு சக்கரவாகனம் தவிர எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை குறிப்பாக முராரி சந்திப்பில் இருந்து பெரியகடைவீதியில் எந்த வாகனமும் இரு சக்கர வாகனம் உள்பட உள்ளே செல்ல அனுமதி இல்லை.
09. சாந்தி காபி சந்திப்பில் இருந்து (காளியம்மன் கோவில் ரோடு) இருசக்கர வாகனம் தவிர எந்த வாகனமும் (உழவர் சந்தை ரோடு ) வழியாக செல்ல அனுமதி கிடையாது. இந்த பாதைக்கு மாற்றாக அனைத்து மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் உப்புகார தெரு வழியாகவோ அல்லது (மகாமகம்குளம்ரோடு) காமராஜர் ரோடு வழியாக தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். இந்த பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
10. தி.கிரைஸ்ட் தி கிங் பள்ளி சந்திப்பில் இருந்து எல்.பி.எஸ் ரோடு வழியாக வெளியே செல்லும் கனரக வாகனம் பள்ளி வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மகாமககுளம் வந்து அண்ணாசிலை வழியாகவோ அல்லது பிச்சை பிராமணர் தெரு வழியாக வெளியே செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் தி.கிரைஸ்ட் தி கிங் பள்ளி சந்திப்பு ரோட்டில் ரோட்டில் இருந்து (L.B.S ROAD) அனுமார் குளம் ரோடு வழியாக காமராஜர் ரோடு செல்ல அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் எப்போதும் அனுமார் குளம் ரோடு வழியாக காமராஜர் ரோட்டுக்கு செல்ல அனுமதி இல்லை.












Click it and Unblock the Notifications