Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லிம் லீக் மாநாட்டில்.. இஸ்லாமியர்களுக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு இன்று நடைபெற்றது. இதில், இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு 5 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது, அச்சமூக மக்களின் நீண்ட கால கோரிக்கை. எங்காவது குண்டு வெடிக்கிறது என்றாலே அது இஸ்லாமியகளின் சதி செயல் என்று பேசும் அளவுக்கு பொது சிந்தனை மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், இன்று நடைபெற்ற மாநாட்டில் நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

MK Stalin Tamil Nadu DMK

இந்நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இஸ்லாமியர்களுக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற உலமாக்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம், ரூ.5000 ஆக உயர்த்தப்படுகிறது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கக்கூடிய 10 உருது மொழி ஆசிரியர் காலிப் பணியிடம் நிரப்பப்படும்
சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் வக்ஃப் வாரியம் அமைக்கப்படும்
உலமாக்களில் முதல்கட்டமாக 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்படும்
கல்லறைத் தோட்டம், கபரஸ்தான் தோட்டம் இல்லாத இடங்களில் அரசு நிலம் தேர்வு செய்து அமைக்கப்படும்

என 5 அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார். மேலும் அதிமுக குறித்தும் எடப்பாடி பழனிசாமி குறித்தும் சரமாரியாக விமர்சித்திருந்தார். "தனது பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார். அவருக்கு தெரிந்தது காலில் விழுவதும், காலை வாரி விடுவது தான். இஸ்லாமியர்களுக்கு அவர் செய்த துரோகங்களில் பட்டியல் மிகப்பெரியது.

அதிமுக ஆதரிக்காவிட்டால், சிஏஏ மசோதா நிறைவேறி இருக்காது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியது திமுக தான். இந்த சட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியது அப்போதைய அதிமுக அரசுதான். சிஏஏ சட்டத்தை தமிழ்நாடு அமல்படுத்தாது என்று உறுதியாக அறிவித்தேன்.

இந்த மாநாட்டில் நிறைய கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்" என்று பேசியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+