தஞ்சை தேர் விபத்து: கரண்ட் ஷாக்.. போகாதீங்க.. எச்சரித்த ஒருவர்! இல்லாவிட்டால்.. மக்கள் கண்ணீர்
தஞ்சாவூர்: தெய்வம் மாதிரி ஒருவர் தடுக்காமலிருந்திருந்தால் நிறைய பேர் தஞ்சை தேர் விபத்தில் பலியாகியிருக்கக் கூடும் என அந்த பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் அப்பர் குருபூஜை ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண அந்த ஊரிலிருந்து வெளியூருக்கு வேலைக்கு சென்றவர்கள், திருமணம் ஆகி வெளியூரில் வசிப்பவர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
பொதுவாக தேர் வீதிகளில் வந்தால் அந்த வழியில் வீடுகளில் உள்ளவர்கள் தேங்காய், பூ பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் போய் தேரில் அமர்ந்திருக்கும் பூசாரியிடம் கொடுப்பர். அவர் சுவாமிக்கு தீபாராதனை செய்து கற்பூரம் ஏற்றி கொடுப்பார்.

ஆரத்தி
அந்த ஆரத்தியுடன் தேரை ஒரு முறை வலம் வந்து வீட்டுக்குள் செல்வர். அது போல் ஒரு வீட்டில் தேங்காய் உடைத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு தேர் சென்றது. அப்போது அங்கிருந்தவர்கள் தேங்காய் உடைத்துக் கொண்டு தேரை ஒரு முறை சுற்றி வந்து வீட்டுக்குள் செல்ல முற்பட்டனர்.
அப்போது திடீரென தேரிலிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இது தெரியாமல் என்னவாயிற்று என்பதை பார்ப்பதற்காக பலர் தேரை நோக்கி ஓடினர். அங்கிருந்த ஒருவர் தேரின் மேல் உள்ள விளக்குகள் பற்றி எரிவதையும் உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதையும் கண்டார்.

போகாதீங்க
உடனே அவர் யாரும் போகாதீங்க.. கரன்ட் ஷாக் அடிச்சிடுச்சி என கூறி தடுத்தார். உடனே அவர்கள் அனைவரும் அப்படியே நின்றுவிட்டனர். தேரை வரவேற்க வீடு தோறும் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்ததால் சாலை முழுவதும் எர்த் இருந்து கொண்டே இருந்தது. இதனால் ஆங்காங்கே சேறும் சகதியுமாக இருந்ததாலும் தேரின் அருகே செல்லாதவர்கள் அதிர்ஷ்டவசமாக பிழைத்தனர்.

தேர் திருவிழா
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் எப்போதும் தேர் இந்த தெருவில்தான் இந்த இடத்தில்தான் திரும்பும். இந்த முறை சாலை விரிவாக்கப் பணிகள் நடந்தன. சாலையின் ஒரு அடி உயரத்தில் போடப்பட்டுள்ளது. ஆனால் மின் கம்பி மட்டும் உயரத்தில் இழுத்து கட்டப்படாமல் இருந்தது. எனவே இந்த மின்கம்பி உரசிதான் இந்த விபத்து ஏற்பட்டது.

கண் முன் தூக்கி வீசப்பட்ட மக்கள்
எங்கள் கண் முன்னே நிறைய பேர் தூக்கி வீசப்பட்டனர். மயங்கி விழுந்தனர். நாங்கள் அவர்களை காப்பாற்ற ஓடிச் சென்றோம். அப்போதுதான் தெய்வம் மாதிரி ஒருவர், கரன்ட் ஷாக் என எச்சரித்தார். எங்கள் கண் முன்னே துடிதுடித்து இறந்தார்கள். தெரு முழுவதும் தண்ணீரால் எர்த் ஏற்பட்டது. கரன்டை ஆப் செய்யவும் வழியில்லை என கண்ணீருடன் தெரிவித்தனர்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications