பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூக்கு கொரோனா உறுதி.. அரசு மருத்துவமனையில் அனுமதி
தஞ்சை: பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக நேற்று 5849 பேருக்கு தொற்று செய்யப்பட்டது.

தமிழகத்தில் இந்த கொரோனா எல்லோரையும் தாக்கி உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அமைச்சர்கள் முதல் ஐஏஎஸ் கலெக்டர்கள் வரை பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்தில் நாளுக்கு நாள் எம்எல்ஏக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவதால் அதன் தாக்குதலுக்கு எம்எல்ஏக்கள் உள்ளாகி வருகிறாரகள்..
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூவுக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூ தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து இருக்கிறது. ஒரு எம்எல்ஏ (ஜெ.அன்பழகன் திமுக) உயிரிழந்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications