கும்பகோணத்தையே கலக்கிய "ஹெலிகாப்டர் பிரதர்ஸ்.." 12 சொகுசு கார் பறிமுதல்.. 7 தனிப்படை.. பின்னணி என்ன?
தஞ்சை: கும்பகோணத்தை கலக்கி வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது 600 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களிடமிருந்து 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்
Recommended Video
கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன். இருவரும் சகோதரர்கள்.
கிரிஷ் பால் பண்ணை, விக்டரி பைனான்ஸ் என்ற பெயர்களில் இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். வெளி நாடுகளிலும் நிறைய தொழில் செய்து வந்துள்ளனர்.

சொந்த ஹெலிகாப்டர்
பணம் செழித்ததால், சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அதில் வலம் வரும் அளவுக்கு போய் விட்டனர். இதனால், ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்று அவர்கள் மக்களால் அழைக்கப்பட்டனர். விக்டரி பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், ரூ. 1 லட்சத்திற்கு ஒரு வருடத்தில் கூடுதலாக ரூ 82,000 தரப்படும் என்று இவர்கள் கவர்ச்சிகர அறிவிப்பு வெளியிட்டனர். இதை நம்பி நிதி வசூல் குவிந்தது. ஆரம்பத்தில், சரியாக பணத்தை திருப்பி கொடுத்ததால் தொழில் அதிபர்கள், வணிகர்கள் என பலரும் இந்த ஹெலிகாப்டர் பிரதர்களிடம் கோடிக் கணக்கில் முதலீடு செய்தனர்.

பாஜகவில் இணைந்தார்
இந்த நிலையில்தான், ஹெலிகாப்டர் பிரதர்களில் ஒருவரான எம்.ஆர்.கணேஷ் பாஜகவில் இணைந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட வர்த்தக தலைவர் பதவி கொடுத்தது பாஜக. கும்பகோணத்துக்கு வரும் பாஜக பிரமுகர்கள் பலரும் ஹெலிகாப்டர் பிரதர் வீட்டிற்கு சென்றும் வரும் அளவிற்கு செல்வாக்கு உயர்ந்தது.

600 கோடி மோசடி போஸ்டர்கள்
இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் முதலீடு செய்தவர்களுக்கு பணம் சரியாக திருப்பி தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ்பானு என்ற தம்பதியினர் தங்களிடம் ரூ.15 கோடி வாங்கி கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்து விட்டதாக கூறிய புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கும்பகோணம் நகரம் முழுவதும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் ரூ.600 கோடி மோசடி செய்து விட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதையடுத்து எம்.ஆர்.கணேஷை பாஜகவிலிருந்து நீக்குவதாக கட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது.

3 பிரிவுகளில் வழக்கு
இந்த நிலையில்தான், ஹெலிகாப்டர் சகோதர்கள் மீது மூன்று பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ரகுநாதன், மீரா, ஸ்ரீதர் ஆகியோர் மீதும் 120 பி, 406, 420 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் நிதி நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

7 தனிப்படைகள்
இந்நிலையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன் தலைமையில் எஸ்பி தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வீட்டில் இருந்த 2 பிஎம்டபிள்யூ உட்பட, 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்று தஞ்சை மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்தில் வைத்துள்ளனர். ஏகப்பட்ட ஆவணங்கள், மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் விசாரணைக்காக எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் பிரதர்ஸை கைது செய்வதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications