கும்பகோணத்தில் துயரம்; பசுவைக் காப்பாற்றும் முயற்சியில் ரயில் மோதி சிறுவன் பலி..
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தான் அழைத்து வந்த மாடு ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க முயன்று , தன் உயிரையும் கொடுத்துள்ளான் சிறுவன் திலீப் குமார்.
Recommended Video
மாட்டை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டுவிட்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் மிசின் தெருவைச் சேர்ந்தவர் அருமதுரை. இவரது மகன் திலிப்குமார் (14). கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வந்தான்.

பதறிய சிறுவன்
இந்நிலையில் நேற்று தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாடு ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றது. அப்போது மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி ஜனசதாப்தி விரைவு ரயில் சென்றதால், மாடு அடிபட்டு இறந்து விடும் என சிறுவன் பதறினான்.

சிறுவன் முயற்சி
எப்படியாவது மாட்டை காப்பாற்ற வேண்டும் என தண்டவாளத்தில் இறங்கி அங்கிருந்து விரட்டியுள்ளான். ஆனால் மாடு அசையாமல் தண்டவாளத்தில் நின்று இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தான் வைத்திருந்த சாட்டை குச்சியால் மாட்டை அடித்து தண்டவாளத்தின் எதிர்புறம் வேகமாக கீழே இறக்கிவிட்டுள்ளான்.

உயிரிழப்பு
பின்னர் தண்டவாளத்தில் இருந்து இறங்க முயன்ற சிறுவன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். மாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் ரயில் நெருங்கிக்கொண்டிருப்பதை கூட கவனிக்காமல் இருந்த சிறுவன் மாட்டை காப்பாற்றிவிட்டு தன்னுயிரை பரிதாபமாக இழந்தான்.

தஞ்சையில் சோகம்
இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே புறக்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications