• search
தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பாமக போல சாதி கட்சிகள் இருந்தால் சமூக ஒற்றுமை எப்படி ஏற்படும்.. திருமா கேள்வி

Google Oneindia Tamil News
  சிதம்பரம் தொகுதி பொன்பரப்பி வன்முறை: திருமாவளவன் சரமாரி கேள்வி- வீடியோ

  கும்பகோணம்: பாமக போன்ற சாதியக் கட்சிகளும், பாஜக போன்ற மதவெறி கட்சிகளும் இருந்தால் சமூக ஒற்றுமை ஏற்படாது" என்று திருமாவளவன் காட்டமாக கூறியுள்ளார்.

  நேற்று வாக்குப்பதிவின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் பெரிய வன்முறை வெடித்தது.

  இதில் அக்கட்சியின் தேர்தல் சின்னமான பானையை சிலர் போட்டு உடைத்தனர். இதனை அங்கிருந்தவர்கள் தட்டிக்கேட்டதால் மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலில் 20 பேர் சேதப்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டன. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

  சாலை மறியல்

  சாலை மறியல்

  இதையடுத்து, பொன்பரப்பி மோதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி விசிகவினர், ஜெயங்கொண்டத்தில் மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதைதவிர, ஆங்காங்கே மரங்களை வெட்டிப் போட்டும் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து பொன்பரப்பி பகுதியில் துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  வன்முறைகள்

  வன்முறைகள்

  இந்நிலையில், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் சொன்னதாவது: "தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பாமக வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வேண்டும் சாதிய வன்முறைகளை தூண்டி விட்டு அறிக்கையை வெளியிட்டனர். இந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிகளில் கைப்பற்ற வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

  தீ வைப்பு

  தீ வைப்பு

  சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது. நேற்று நடைபெற்ற சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி இடத்தில் காலை 10 மணிக்கு தலித் மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வன்முறையால் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  வன்முறை

  வன்முறை

  இது போல் தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை நீலத்தநல்லூர் போன்ற பகுதிகளிலும் தலித்துகள் மீது வன்முறை நடைபெற்றுள்ளது. அரசியல் ஆதாயம் தேட அதிமுக மற்றும் பாஜக இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது. இதை கடுமையாக முயற்சித்தும் ஆனால் இவர்கள் தோல்வியுற்றன.

  வாக்குபதிவு

  வாக்குபதிவு

  மேலும் அரியலூரில் நடைபெற்ற பொன்பரப்பியில் இந்து முன்னணியில் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. இரண்டாயிரம் வாக்குகள் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.

  கள்ள ஓட்டு

  கள்ள ஓட்டு

  இதனால் கள்ள ஓட்டு போட்டது வாக்குச்சாவடி கைப்பற்றியது காரணமாக இருக்கலாம் என்பதல், இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன் பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். இதுகுறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் இன்று சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்.

  வெற்றி பெறுவோம்

  வெற்றி பெறுவோம்

  திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து விடக்கூடாது என்று பலர் பகிரங்க முயற்சியில் இறங்கினர். அதை நாங்கள் தெளிவாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளோம். இவர்கள் செய்த வன்முறைகள் எல்லாம் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம். பாமக போன்ற சாதியக் கட்சிகள் பாஜக போன்ற மதவெறி கட்சிகள் செயல்படுகிறவர்கள் சமூக நல்லிணக்கம் சமூக ஒற்றுமை ஏற்படாது" என்றார்.

  முன்னதாக, கலவரத்தில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

  English summary
  VCK Thirumavalavan comment on Pon Parappi Village Violence and criticized BJP, PMK
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X