'வேறு வழியின்றி திருடி விட்டேன்'.. மனம்மாறி நகை, பணத்தை அப்படியே வைத்து விட்டு சென்ற கொள்ளையன்!
கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது பரியாரம் கிராமம். கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக பரியாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்
பரியாரம் கிராமத்தில் உள்ள அஷரப் என்பவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்பு ரூ.10 ஆயிரம், 1 பவுன் நகை திருட்டு போனது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அஷரப் வீட்டின் வாசல் முன்பு 3 பெரிய கவர்கள் கிடந்தன.

மர்ம பார்சல்
திடீரென மர்ம பார்சல் கிடந்ததால் அதனை அச்சத்துடன் திறந்து பார்த்தபோது, அதில் ரூ. 1 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரொக்கப்பணம், 4.5 பவுன் தங்க செயின், 630 மில்லி கிராம் கம்மல், மோதிரம் உள்ளிட்டவை இருந்தன. இதனால் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அதில் ஒரு கடிதமும் இருந்தன.அஷரப் குடும்பத்தினர் அந்த கடிதத்தை பிரித்து படித்தனர்.

மன்னிப்பு கோருகிறேன்
அதில், ''கொரோனா காலத்தில் வேறு வழியின்றி பல வீடுகளில் நான் திருடிவிட்டேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன். எந்தெந்த வீடுகளில் என்னென்ன பொருட்கள் திருடினேன் என்பதை இந்த கடிதத்தில் விவரமாக எழுதி வைத்துள்ளேன். தயவு செய்து அந்தந்த வீடுகளில் அவர்களுக்கு உரிய பொருட்களை கொடுத்துவிடுங்கள்'' என்று கூறப்பட்டிருந்தது.

மனம் மாறினான்
இவை அனைத்தும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டுபோன பணம் மற்றும் நகைகள் என்பது தெரியவந்தது. கடிதம் எழுதி வைத்த கொள்ளையன் அந்த பகுதியில் தொடர்ந்து கைவரிசை காட்டியுள்ளான். ஆனால் அனைத்தையும் திருடிய பிறகு கொள்ளையன் மனம் மாறி அவற்றை அஷரப் வீட்டின் வாசலில் வைத்து சென்றுள்ளான். இதைதொடர்ந்து அஷரப், அந்த பணம் மற்றும் நகைகளையும் அதில் இருந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்தார்.

மக்கள் ஆச்சரியம்
போலீசார் அவற்றை கோர்ட்டில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். கிடைத்த பணம், நகையை சுருட்டி செல்பவர்கள் மத்தியில் மனம்மாறி திருடிய பொருட்களை திருப்பி ஒப்படைத்த கொள்ளையனின் செயல் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications