6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ண சீருடைகள்.. அமைச்சர் செங்கோட்டையன்
தேனி:6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளை மிஞ்சுகின்ற வகையில் சிறந்த வண்ண சீருடைகள் வடிவமைத்து தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
தேனியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

5ம் வகுப்பு வரை படிக்கின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், 4 செட் வண்ண சீருடைகள் வழங்கப்படும். 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு தனியார் மெட்ரிக் பள்ளிகளை மிஞ்சுகின்ற வகையில் சிறந்த வண்ண சீருடைகள் வடிவமைத்து தரப்படும்.
இந்தாண்டு 12ம் வகுப்பு முடித்தவர்கள், படிக்கின்றவர்கள் மற்றும் 11ம் வகுப்பு படிக்கின்ற 15 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். அவை அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications