தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

களமிறங்கிய ஓபிஎஸ் மகன்கள்.. தேனி மாவட்டத்தை கலக்குகிறார்கள்

தேனி மாவட்டத்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள் ஓபிஎஸ் மகன்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    தேனீ அரசியலில் களமிறங்கிய ஓ.பி.எஸ் மகன்கள்

    தேனி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் இருவருமே தேனி மாவட்டத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறார்கள்.

    ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இளைஞர் இளம் பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்மூலம் அவர் அரசியல் களத்தில் குதித்து மாவட்ட அளவில் அரசியல் செய்து வந்தார். ஆனால் திடீரென அவரிடமிருந்து

    பதவியை ஜெயலலிதா பறித்து விட்டார். இவர் மீது பல புகார்கள் வலம் வந்தன. என்றாலும் இவரை தனக்கு பின் கட்சிக்குள் கொண்டு வந்து எப்படியாவது அரசியல் வாரிசாக உருவாக்கி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஓபிஎஸ். தற்போது இவருக்கு கட்சியில் பொறுப்பும் வழங்கப்பட்டது.

    ரவீந்திரநாத் படம்

    ரவீந்திரநாத் படம்

    சமீபத்தில்கூட தேனி மாவட்டத்தில் "தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்" என்ற பெயரில் ஓபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் நற்பணி மன்றம் தொடங்கினார்கள். இது சம்பந்தமாக ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இதில் ரவீந்திரநாத் படமும் இடம் பெற்றது.

    கருப்பண சாமி கோவில்

    கருப்பண சாமி கோவில்

    இவர் இப்படி என்றால், ஓ.பி.எஸ்ஸின் 2-வது மகனான ஜெயபிரதீப்பும் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். பெரியகுளத்தில் எங்கு என்ன நிகழ்ச்சி நடந்தாலும் அதில் கொஞ்ச நேரமாவது தலையை காட்டிவிட்டு வருகிறார். கன்டமனூர் அருகே உள்ள கருப்பண சாமி கோவிலுக்கு குதிரையும் கோவில் கட்டிடங்களையும் கட்டி தருவதாக அந்த மக்களுக்கு பிரதீப் வாக்கும் தந்துள்ளார்.

    நேரம் இல்லை

    நேரம் இல்லை

    அதேபோல தற்போது கஜா புயல் நிவாரண பணிகளிலும் புயல் வேகத்தில் இவர் இறங்கி உள்ளார். மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ஓபிஎஸ் சென்று கொண்டிருப்பதால், தன் சொந்த தொகுதியை அவரால் கவனிக்கவே முடிவதில்லை. அதனால் இந்த பொறுப்பை பிரதீப் ஏற்றுள்ளார்.

    10 கிலோ மீட்டர்

    10 கிலோ மீட்டர்

    சோத்துப்பாறை வழியாக கணக்காய் வரை சென்று மக்களை சந்தித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு காட்டு பகுதியில் நடந்தே சென்று சொக்கர் அலைமலை கிராம மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லி உள்ளார். அவருடன் கட்சிக்காரர்களும் சென்றிருக்கிறார்கள்.

    நம்பிக்கை வார்த்தைகள்

    நம்பிக்கை வார்த்தைகள்

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுபொருள், நிவாரண உதவி என எல்லாமே தந்துவிட்டு வந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் என்ன உதவி கேட்டாலும் அவர்கள் அடிப்படை பிரச்சனை தீர எதுவானாலும் செய்கிறேன் என்று நம்பிக்கையும் தந்திருக்கிறார். இதை கேட்டு மக்கள் எல்லோரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

    செல்வாக்கு எப்படி?

    செல்வாக்கு எப்படி?

    எப்படியோ, ஓபிஎஸ் மகன்கள் இருவருமே கட்சிக்குள் தீவிரமாக இறங்கி விட்டது போல தெரிகிறது. தேனி மாவட்டத்தில் இவர்கள் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்று முன்னணியில் வருவார்கள் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

    English summary
    Dy CM OPS's Sons have involved into serious political work in Theni Dist.,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X